தனுஷூக்கு வெளியில் நல்ல இமேஜ் இருக்கிறதா.. விவாகரத்தை ஏன் வெளிப்படையாக சொல்றீங்க.. சரமாரியாக கேட்ட மாணிக்கம் நாராயணன்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தனுஷூக்கு வெளியில் நல்ல இமேஜ் இருக்கிறதா.. விவாகரத்தை ஏன் வெளிப்படையாக சொல்றீங்க.. சரமாரியாக கேட்ட மாணிக்கம் நாராயணன்

தனுஷூக்கு வெளியில் நல்ல இமேஜ் இருக்கிறதா.. விவாகரத்தை ஏன் வெளிப்படையாக சொல்றீங்க.. சரமாரியாக கேட்ட மாணிக்கம் நாராயணன்

Nov 23, 2024 03:47 PM IST Marimuthu M
Nov 23, 2024 03:47 PM , IST

  • தனுஷூக்கு வெளியில் நல்ல இமேஜ் இருக்கிறதா.. விவாகரத்தை ஏன் வெளிப்படையாக சொல்றீங்க.. சரமாரியாக கேட்ட மாணிக்கம் நாராயணன் பேட்டியைக் காணலாம். 

தனுஷ் என்பருக்கு வெளியில் நல்ல இமேஜ் இருக்கிறதா என்றும், செலிபிரட்டிகள் விவாகரத்தை ஏன் வெளிப்படையாக சொல்கிறீர்கள் என  தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டியளித்துள்ளார். 

(1 / 6)

இதுதொடர்பாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’தனுஷ் - நயன்தாரா விவகாரத்தில் தனுஷ் ஒரு நடிகன். நயன்தாரா ஒரு நடிகை. ஒருத்தருக்கொருத்தர் பழக்கம் உள்ளவங்க. ஏன் ஒருத்தவங்க மேல் மண்ணை வாரி போடுறீங்க.தனுஷ் என்பவருக்கு வெளியில் நல்ல இமேஜ் இருக்கா. எனக்கு தனிப்பட்ட முறையில் பழக்கமில்லை. தனுஷ் நல்ல முறையில் சம்பளம் வாங்கிறே. மேலும் மேலும் சம்பளம் வாங்கிட்டு இருக்க. அப்போது உன்னுடைய தரத்தை உயர்த்திக்கணும். உன்னுடைய எண்ணங்களை உயர்த்திக்கணும். உனக்கு இவ்வளவு சம்பளம் இருக்கும்போது, ஏன் இப்படி''.

(2 / 6)

'உனக்கு ஒரு வேலை இருக்கு. அதில் நீ கவனம் செலுத்து. இரு தரப்பிலும் தவறு இருக்கிறது. இவங்களாவது விட்டுக்கொடுக்கலாம். இல்லையென்றால் தனுஷாவது விட்டுக்கொடுக்கலாம்.இரண்டு பேருக்கும் பணத்துமேல் பேராசை இருப்பதால், இரண்டு பேருக்கு அறிவில்லைன்னு சொல்றேன்.நீ கல்யாணம் ஆகி குழந்தைப்பெற்று செட்டில் ஆகிட்ட, உனக்கு பணத்து மேல் ஏன் இவ்வளவு ஆசை. வருகிற ஷேரில் இவ்வளவு கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கலாம்.இரண்டு பேரும் பேசவேண்டியதை மீடியாவை கூப்பிட்டுப் பேசுறது என்பது, தன்னைத்தானே தாழ்த்திக்கிறாங்க.என்னைப் பொறுத்தவரை பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. உங்களுக்கு எவ்வளவு இருக்கு வாழ்க்கை. அப்போது உங்களுக்கு கொஞ்சமாவது தரம் வேண்டும்'.

(3 / 6)

'நானும் ரெளடி தான் படத்தில் ஏதாவது நஷ்டம் ஆகியிருந்தால், அப்போதே, தனுஷாகிய நீங்கள் நயன் தாராவிடம் பேசி எதிர்காலத்தில் பணம் தரலாம் எனப் பேசியிருக்கலாம். இரண்டு பேரும் யார் சொன்னால் கேட்பாங்களோ, அந்த மாதிரி பெரிய ஆட்களைக் கூப்பிட்டு பேசி முடிச்சிருக்கலாம் இல்லையா.இல்லையென்றால், வக்கீல் இல்லை பொது ஆட்களை வைத்து, பேசி முடித்திருக்கலாம். தனுஷும் நயன்தாராவும் ஒரே கல்யாணத்தில் ஒரு வரிசையில் உட்கார்ந்து இருக்காங்களே. நானாக இருந்தால், நேரடியாகப் போய், ஏன் இப்படி பண்ணுனீங்க அப்படின்னு பேசியிருப்பேன்'.

(4 / 6)

‘’நமக்கு தெளிவான சிந்தனை இருந்தால் ஏன் பயப்படணும். அஜித் கூட என்னை ஏமாத்திட்டான். அவனை நேரில் பார்த்தால் முறைத்துக்கொண்டா இருப்பேன். நான் இவ்வளவு சொல்கிறேன்ல. நீ என்கிட்ட பணம் வாங்கினாயா இல்லையா எனக் கேட்பேன். இதில் எனக்கு என்ன பயம் இருக்கு.மடியில் கணம் இருந்தால் தாங்க, வழியில் பயம். திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்காக, பின்னி மில்லில் சூட் செய்ய 15 நாட்கள் இலவசமாக அனுமதி வாங்கிக்கொடுத்தேன். அதனால் தனுஷ் என்ன எனக்கு கோயில் கட்டினாரா?. அந்த மாதிரி நிறைய பேருக்கு நான் உதவி செய்திருக்கேன்''.

(5 / 6)

‘’ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து தொடர்பான செய்தியால், பல மக்களும் அதை செய்ய ஆரம்பிப்பாங்க. இதனால் சமூகம் சீர்கெடுது. விட்டுக்கொடுத்துப்போயிடலாம்ல. விட்டுக்கொடுப்பது தானே வாழ்க்கை.எனக்கும் எனது மனைவிக்கும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்தது. என் மனைவியின் தவறை நான் ஏற்றுக்கொண்டேன். என் தவறை அவர் ஏற்றுக்கொண்டார்.தவறு இல்லாத மனிதன் கிடையாது. இரண்டு நாட்கள் சண்டை போடலாம். மூன்றாவது நாள் ஏற்றுக்கொள்ளலாம்.செலிபிரட்டி விவாகரத்தை ஏன் வெளிப்படையாக ஏன் கொண்டு வர்றீங்க. சமூகம் கெடுது. கூலி டைட்டிலுக்கான உரிமையைக் கொடுத்தது நான் தான். அது நல்ல முறையில் ஓடணும். லோகேஷ் கனகராஜின் வன்முறை எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் படம் ஓடணும்னு தோணுது’’ எனக் கூறினார், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்