கிளிக்கு கொய்யாப்பழம் ஊட்டிய பில் ரூ.10 ஆயிரம்.. படபூஜைக்கு கிராமத்து செட்.. தங்கர்பச்சானின் சேட்டைகள்.. பாலாஜி பிரபு
கிளிக்கு கொய்யாப்பழம் ஊட்டிய பில் ரூ.10 ஆயிரம்.. படபூஜைக்கு கிராமத்து செட்.. தங்கர்பச்சானின் சேட்டைகள்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டியளித்துள்ளார்.

கிளிக்கு கொய்யாப்பழம் ஊட்டிய பில் ரூ.10 ஆயிரம் எனவும், படபூஜைக்கு கிராமத்து செட் என்றும்; தங்கர்பச்சானின் சேட்டைகள் இதுதான் எனவும் படத்தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மீடியா சர்கிள் யூட்யூப் சேனலில் பேசியதாவது, ‘ என்னைப் பொறுத்தவரை தங்கர் பச்சான் ஒரு சிறந்த நடிகர், சிவாஜியை விட சிறந்த நடிகர். ஏனென்றால், நிஜ வாழ்விலும் நடிகர் தங்கர் பச்சான் சிறந்த நடிகர். 1985-ல் பவுர்ணமி அலைகள் என்கிற படம், அப்பா வந்து புரொடியூசர் மற்றும் டைரக்டர். ஒளிப்பதிவாளர் விஸ்வம் நடராஜ்ன்னு பெயர். அந்த சூட்டிங்கில் காமெடி சீன் எடுக்கும்போது, ஒருத்தர் சிரிச்சிடுகிறார். அப்போது அப்பா அவரை விசாரிக்கும்போது, ஒளிப்பதிவாளர் விஸ்வம் நடராஜ் வந்து தன்னோட அஸிஸ்டென்ட் என்று சொல்கிறார். பின் அவரை அந்த இடத்தை விட்டு வெளியேற்றச் சொல்கிறார். அவர் தான் தங்கர் பச்சான். அப்போது அவர் பெயர் தங்கராஜ்.
அடுத்து அவர் சோகமாக இருக்கிறதைப் பார்த்துட்டு, பின் அவரே மதிய உணவு இடைவெளியில் சமாதானப்படுத்துகிறார். பிறகு அவரை விசாரிக்கும்போது, இதே மாதிரி சேட்டைகளை தங்கர் பச்சான் எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களிலும் செய்கிறார்.