Sangili Murugan: இளையராஜாவுக்கு இசை தெரியுமா என சோதித்த சங்கிலி முருகன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sangili Murugan: இளையராஜாவுக்கு இசை தெரியுமா என சோதித்த சங்கிலி முருகன்!

Sangili Murugan: இளையராஜாவுக்கு இசை தெரியுமா என சோதித்த சங்கிலி முருகன்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 10, 2023 08:31 AM IST

இளையராஜாவுக்கு இசை தெரியுமா என்பதை சோதித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார் பழம்பெரும் வில்லன், குணச்சித்திர நடிகர் சங்கிலி முருகன்

சங்கிலி முருகன் பகிர்ந்த சுவாரசிய கதை!
சங்கிலி முருகன் பகிர்ந்த சுவாரசிய கதை!

அதைத் தொடர்ந்து ‘சுவரில்லாத சித்திரங்கள்’ ‘ஒரு கை ஓசை’ ‘சட்டம் ஒரு இருட்டறை’ ‘கழுகு’ ‘முள் இல்லாத ரோஜா’ ‘நான் மகான் அல்ல’ ‘கொடி பறக்குது’ ‘நாடோடி பாட்டுக்காரன்’ ‘தேவர் மகன்’ ‘அரண்மனைக்கிளி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்; 

பாக்யராஜ் இயக்கிய ‘ஒரு கை ஓசை’ என்ற படத்தில் சங்கிலி என்ற கதாபாத்திரத்தில் முருகன் நடித்திருந்தார்; அந்த படத்தில் இருந்து அவருக்கு அடைமொழியாக சங்கிலி என்ற பெயர் தொடர்ந்து வந்தது; தற்போதும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் சங்கிலி முருகன் விஜயின் ‘புலி’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ ‘ராட்சசன்’ ‘மாரி 2’ ‘மண்டேலா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்; 

அண்மையில் 'Touring talkies' சேனலுக்கு பேட்டி கொடுத்த அவர் இளையராஜாவிற்கு இசை தெரியுமா? என்பதை தான் சோதித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “அப்பொழுதெல்லாம் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை; நாடகம் நடத்த வேண்டும் என்றால் அதில் ஒரு பிரபல நடிகர் இருக்க வேண்டும்; அப்போதுதான் ஏதாவது பெரிய விழாக்களில் அதை அரங்கேற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் அப்போது இருந்த பிரபல நடிகர் ஒருவரிடம் அது குறித்து பேசினேன். அவரும் நடிக்க சம்மதித்து விட்டார்.

திருச்சியில் ஒரு நாடகத்தை நடத்துவதாக திட்டம்; இதனையடுத்து அதற்கான அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு நான்கு மணி அளவில் வந்து வீட்டில் உட்கார்ந்தேன்; அப்போது இரண்டு பேர் உள்ளே வந்தார்கள்; நான் அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டபோது நாங்கள் பாவலர் வரதராஜனின் தம்பிகள் என்றார்கள். அவர்கள்தான் இளையராஜாவும் அவரது சகோதரர் பாஸ்கரும்.

அவர்கள் திடீரென்று நாங்கள் இசை கருவிகளை  வாசிப்போம்; நீங்கள் நாடகம் நடத்துவதாக கேள்விப்பட்டோம்; அதில் நாங்கள் வாசிக்க வேண்டும் என்று கேட்டனர். உடனே எனக்கு அதிர்ச்சி.. அப்பொழுதுதான் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தேன்; அதற்குள் எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று..! உடனே நான் எப்பொழுது வந்தீர்கள் என்று கேட்டேன்.. இப்போது தான் வந்தோம் என்று சொல்லி பெட்டியை காண்பித்தார்கள்.. ஊரிலிருந்து நேராக இங்குதான் வருகிறோம் என்றார்கள்.

உடனே நான் அவர்களிடம் உங்களுக்கு ஆர்மோனியம், தபலா வாசிக்க தெரியுமா என்று கேட்டுவிட்டு அவர்களை சோதனை செய்ய நினைத்தேன்; அவர்கள் மிருதங்கம் மற்றும் தபலா வைத்திருந்தார்கள்; அவர்கள் இருவரையும் கமலாவிடம் அழைத்து சென்று, கமலா இவர்களுக்கு வாசிக்கத் தெரியுமா? என்று சோதனை செய் என்றேன். கமலா அவர்களை சோதனை செய்துவிட்டு, சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்.. நன்றாக வாசிக்கிறார்கள் என்று சொன்னாள். 

தொடர்ந்து எங்கு தங்குவீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது, தங்குவதற்கெல்லாம் இடமில்லை என்று சொல்லி.. அவர்களின் மொத்தக்கதையையும் சொன்னார்கள்; உடனே கமலா, தான் கோடம்பாக்கத்தில் கட்டி பூசாமல் இருந்த அவள் வீட்டை அவர்கள் தங்குவதற்கு கொடுத்தாள்; பின்னாளில் அவர்கள் இரண்டு பேரும் பெரிய ஆளாகி விட்டார்கள். ஒரு கட்டத்தில் பின்னணி இசைக்காக நான் இளையராஜாவிடம் நான் காத்து இருப்பேன். அப்போது பாஸ்கர் கிண்டலாக சொல்வார்... எங்களுக்கு இசை தெரியுமா என்று சோதனை செய்தது அண்ணன் ஒருவர் தான் மட்டும் என்று” என்று அவர் பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.