‘ஒத்துழைத்தால் தான்.. நான் திறந்த புத்தகம்.. மறைக்க எதுவும் இல்லை’ போட்டு உடைத்த புவனேஸ்வரி!-popular glamour actress bhuvaneshwari gave an interview about her film career - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஒத்துழைத்தால் தான்.. நான் திறந்த புத்தகம்.. மறைக்க எதுவும் இல்லை’ போட்டு உடைத்த புவனேஸ்வரி!

‘ஒத்துழைத்தால் தான்.. நான் திறந்த புத்தகம்.. மறைக்க எதுவும் இல்லை’ போட்டு உடைத்த புவனேஸ்வரி!

HT Tamil HT Tamil
Aug 24, 2024 10:46 AM IST

‘ஒரு ஆண் குழந்தையாக, தன் தாய் மீது பலர் விமர்சனம் செய்யும் போது, மகனின் வேதனைை என்னவா இருக்கும் என்பது தாய்மார்களுக்கு புரியும். நானும் என் மகனும் அதை கடந்து தான் வாழ்ந்தோம். இந்த பாதையில் நாம் வரும் போது முள் இருக்கும். அது குத்த தான் செய்யும்’

‘ஒத்துழைத்தால் தான்.. நான் திறந்த புத்தகம்.. மறைக்க எதுவும் இல்லை’ போட்டு உடைத்த புவனேஸ்வரி!
‘ஒத்துழைத்தால் தான்.. நான் திறந்த புத்தகம்.. மறைக்க எதுவும் இல்லை’ போட்டு உடைத்த புவனேஸ்வரி!

‘‘குடும்ப வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. ஆன்மிகத்தில் தான் எனக்கு நாட்டம் அதிகம். குடும்ப வாழ்க்கை எனக்கு இல்லை, ஆனால் எனக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு இப்போது தான் திருமணம் ஆனது. அவர் சட்டம் படித்துள்ளார். குடும்ப வாழ்க்கையில் எல்லா பெண்களுக்கும் ஆசை இருக்கும், எனக்கும் இருந்தது. ஆனால், எனக்கு அதற்கான வாய்ப்பே அமையவில்லை. இல்லாத ஒன்றை பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என்று தான் பொதுவாழ்க்கைக்கு தாவினேன். நானும் என் மருகளும் நண்பர்களாக தான் இருக்கிறோம், நாங்க மாமியார்-மருமகள் போலவே பேசமாட்டோம். என் மகனுக்கு திருமணம் செய்யும் போது, கொரோனா காலம். ஜோதிடர் குறித்து கொடுத்த நேரம் நல்லநேரம் என்பதால் திருச்செந்தூரில் திருமணத்தை முடித்தோம். திருச்செந்தூர் முருகன் தான் என்னுடைய ஆஸ்தான கடவுள்.

ஒரு ஆண் குழந்தையாக, தன் தாய் மீது பலர் விமர்சனம் செய்யும் போது, மகனின் வேதனைை என்னவா இருக்கும் என்பது தாய்மார்களுக்கு புரியும். நானும் என் மகனும் அதை கடந்து தான் வாழ்ந்தோம். இந்த பாதையில் நாம் வரும் போது முள் இருக்கும். அது குத்த தான் செய்யும். அவர் படித்தவர் என்பதால், நான் சாய்ந்தால் கூட, அவர் என்னை ஆறுதல்படுத்தி அழைத்து வந்தார். அடிப்படையில் நான் எதற்காகவும் அழுதது இல்லை. அழவும் மாட்டேன். அழுதால் எல்லார் மீதும் இருக்கும் வன்மம் போய்விடும்.

தெலுங்கில் எனக்கு பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்கள் தான் வந்தன. ஆனால், அதிலும் கவர்ச்சி கலந்த காமெடி இருக்கும். தமிழிலும் அப்படி தான். நான் நடித்த போது நிறைய ஜீனியஸ் இருந்தார்கள். அவர்களுடன் நடிப்பதே எனக்கு உற்சாகமாக இருந்தது. என்னிடம் கதை சொல்லும் போதே நான் டைம் கேட்பேன். அதைப் பற்றி யோசிப்பேன், சிந்திப்பேன், எனக்கு செட் ஆனால் நடிப்பேன். என்னுடைய விஷூவலில் எனக்கு செட் ஆகாத படங்களை நான் ஏற்கமாட்டேன். அப்படி நிறைய படங்களை தவிர்த்திருக்கிறேன்.

சீரியலில் பார்க்கும் பார்வையே வேறுவிதமாக இருக்கிறது. மருமகளை விஷம் வைத்து கொலை செய்யும் காட்சிகளை வைப்பார்கள். இதனால் எனக்கும் இயக்குனர்களுக்கும் சண்டை வரும். எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால், அனைத்தையும் குறைத்துவிட்டேன். என் வளர்ச்சிக்கு நிறைய தடைகள் இருந்திருக்கிறது. அதை எல்லாம் நான் நினைத்து உடைந்தது கிடையாது. அதைப்பற்றி இப்போது பேசவும் முடியாது. ஒத்துழைத்தால் தான் சினிமாவில் வர முடியும் என்பது கிடையாது. நல்ல நிலையில் சில பெண்கள் இருக்கிறார்கள்.

சினிமா, சீரியல் மட்டுமில்லாமல் அரசியலிலும் இருந்தேன். அதுவும் என்னை டார்க்கெட் செய்ய காரணமாக இருந்தது. நான் நல்ல ரோலுக்காக தான் காத்திருந்தேன். இனி கதாநாயகியாக நடிக்க முடியாது; நல்ல கதாபாத்திரமாக நடிக்கலாம். என் படங்களில் எனக்கான ஆடைகளை நான் தான் தயார் செய்வேன். எங்கு ஷூட் என்றாலும் நான் தான் எடுத்துச் செல்வேன். என் படங்களில் வரும் ஆடைகளை நான் தான் விரும்பி அணிந்தேன்.

என்னுடைய வாழ்க்கை புத்தகம் திறந்தநிலையில் தான் உள்ளது. என்னைப் பற்றி மறைக்க எதுவும் இல்லை, எல்லாருக்கும் எல்லாமும் தெரியும். சில நேரங்களில் நிறை பத்திரிக்கை விமர்சனங்கள் வரும். அவர்களிடம் நான் கடிந்து கொண்டதில்லை. ‘இதை கொஞ்சம் குறைச்சிருக்கலாம்’ என்று தான் கூறியிருக்கிறேன். அவர்களே, ‘நான் திட்டுகிறேனா.. பாராட்டுகிறேனா..’ என்பது புரியாமல் இருந்தனர்,’’

என்று அந்த பேட்டியில் புவனேஸ்வரி கூறியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.