தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ps 2 Ott: மணிரத்னம் பிறந்தநாளில் ஓடிடியில் வெளியான பொன்னியின் செல்வன் 2..எந்த தளத்தில் பார்க்கலாம்

PS 2 OTT: மணிரத்னம் பிறந்தநாளில் ஓடிடியில் வெளியான பொன்னியின் செல்வன் 2..எந்த தளத்தில் பார்க்கலாம்

Aarthi V HT Tamil
Jun 02, 2023 11:57 AM IST

பொன்னியின் செல்வன் 2 படம் திரையரங்கை தொடர்ந்து ஓடிடிக்கு வந்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 ஓடிடிக்கு வந்துள்ளது . கடந்த வெள்ளிக்கிழமை (மே 26) படம் பிரைம் வீடியோவில் வந்தது. ஆனால் படம் பார்க்க ரூ.399 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 இப்போது இன்று (ஜூன் 2) முதல் அனைத்து ஃபிரைம் வீடியோ சந்தாதாரர்களுக்கும் கிடைக்கிறது. அதாவது இனிமேல் அனைவரும் இந்தப் படத்தை இலவசமாகப் பார்க்கலாம். இதை அமேசான் ஃபிரைம் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

திரையரங்கில் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, பொன்னியின் செல்வன் 2 ஓடிடிக்கு வந்து இருக்கிறது. படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது. இருப்பினும் முதல் பாகம் வசூல் செய்ய முடியவில்லை.

இந்தப் படத்தை மணிரத்னம் மற்றும் சுபாஸ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர். விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளிபல்லா, பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடித்தனர். சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் ரூபாய் 300 கோடியை எட்டியதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இந்த ஆண்டு தமிழில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்