குத்துப்பாட்டு கேட்ட விஜய்.. சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி என எழுதிய கவிஞர்..தியேட்டர் ரியாக்ஷனை பகிர்ந்த வைரமுத்து
குத்துப்பாட்டு கேட்ட விஜய்.. சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி என எழுதிய கவிஞர்..தியேட்டர் ரியாக்ஷனை பகிர்ந்த வைரமுத்து
கவிஞர் வைரமுத்து நடிகர் விஜய் கேட்டதால் எழுதிக்கொடுத்த சரக்கு வைச்சிருக்கேன் பாடல் உருவான விதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த நான்கு தசாப்தங்களாக தனது தமிழாலும், இசை வழியே பாடல்களில் தமிழர்களின் மனங்களில் குடியிருப்பவர், கவிப்பேரரசு வைரமுத்து. இவரது பெயரை உச்சரத்திலே அழகு தமிழும், கணீர் குரலில் இவரது தமிழ் உச்சரிப்பும், மிக முக்கியமாக வெள்ளை ஜிப்பா அணிந்த இவரது தோற்றமும் நினைவுக்கு வரும். கவிஞர் வைரமுத்துவின் பூர்வீகம், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியாகும்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வைரமுத்து, தமிழ் மீதான பற்றால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் படித்தவர்.
15 வயதில் வெண்பா எழுதிய வைரமுத்து:
தனது பத்தாவது வயதிலேயே கவிதைகள் எழுதும் பழக்கத்தை கொண்டவராக இருந்த வைரமுத்து, பதின்ம வயதில் வெண்பாக்கள் எழுதும் அளவில் தன்னை வளர்த்துக்கொண்டார்.
கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனாக இருக்கும்போதே ’வைகறை மேகங்கள்’ என்ற கவிதை நூல் தொகுப்பை வெளியிட்டு பிரபலமடைந்தார். அதன்பின் முதுகலையை தமிழ் இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.
கல்லூரி படிப்புக்குப் பின் தமிழ்நாடு அலுவல் மொழி ஆணையத்தில் மொழிப்பெயர்பாளராக பணியாற்றி வந்த வைரமுத்துவுக்கு சினிமா மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது.
அப்படி பாரதி ராஜா மூலம் அவரது இயக்கத்தில் உருவான நிழல்கள் படத்தில், இளையராஜாவின் இசையில் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் கவிஞராக காலடி எடுத்து வைத்தார். இதுவரை 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து ஏழு தேசிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்கு வைச்சிருக்கேன் பாடல் உருவான விதம் குறித்து விளக்கும் கவிஞர் வைரமுத்து:
சமீப காலமாக தனது அனுபவங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் எழுதி வரும் கவிஞர் வைரமுத்து, சரக்கு வைச்சிருக்கேன் பாடல் உருவான விதத்தை நம்மிடம் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் கவிஞர் வைரமுத்து,
‘’விஜய் நடித்த
ஷாஜகான் படத்துக்கு
எல்லாப் பாடல்களையும்
எழுதி முடித்தேன்
'மெல்லினமே'
'மின்னலைப் பிடித்து'
'அச்சச்சோ புன்னகை'
ஆகிய பாடல்கள்
இசை இலக்கியமாய்
அமைந்தது கண்டு
ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்
ஓர் அதிகாலையில்
ஒருகால் காருக்குள்ளும்
மறுகால் தரையிலும்
இருந்த பரபரப்பில்
அந்தப் படத்தின் இயக்குனர்
ரவி ஓடிவந்தார்
'படத்துக்கு இன்னொரு
பாட்டு வேண்டும்' என்றார்
'எல்லாப் பாட்டும்
முடிந்து விட்டதே;
இனி என்ன பாட்டு' என்றேன்
'எல்லாப் பாட்டும்
நல்ல பாட்டாகவே
இருக்கு கவிஞரே;
ஒரே ஒரு குத்துப்பாட்டு
வேண்டும்' என்றார்
(கூத்துப் பாட்டு என்பதுதான்
மொழிச் சோம்பேறிகளால்
குத்துப் பாட்டு என்றாகிவிட்டது)
தயங்கினேன்
'விஜய் சொல்லி
அனுப்பினார்' என்றார்
கதாநாயகன் சொன்னபிறகு
மறுக்க முடியவில்லை;
எழுதிக் கொடுத்தேன்
அரங்கம் சென்று பார்த்தால்
இலக்கியப் பாடல்களுக்கு
மெளனமாய் இருந்த கொட்டகை
கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது
விஜய் கணக்கு
தப்பவில்லை
இசைஇலக்கியம்
இன்புறுவதற்கு;
கூத்துப் பாட்டு
கொண்டாடுவதற்கு
அந்தப் பாட்டு
எந்தப் பாட்டு தெரியுமா?
'சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கறுத்த கோழி மிளகுபோட்டு
வறுத்து வச்சிருக்கேன்'' என கவிஞர் வைரமுத்து தன் பாடல் உருவான விதத்தைப் பகிர்ந்து இருக்கிறார். இப்பாடலில் இது சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி என்னும் வரிகள், ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு என பல இரட்டை அர்த்த ஆபாச வரிகளைப் போட்டு எழுதியிருப்பார், கவிஞர் வைரமுத்து.
டாபிக்ஸ்