தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pichaikkaran 2 Ott: பிச்சைக்காரன் 2 ஓடிடியில் எப்போது ரிலீஸ்?

Pichaikkaran 2 OTT: பிச்சைக்காரன் 2 ஓடிடியில் எப்போது ரிலீஸ்?

Aarthi V HT Tamil
May 19, 2023 01:18 PM IST

பிச்சைக்காரன் 2 ஓடிடியில் எப்போது ரிலீஸ் என தகவல் வெளியாகி உள்ளது.

பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் 2

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்துதரப்பு மக்களிடமும் விஜய் ஆண்டனியை கொண்டு சேர்த்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் பேனரில் இந்தப் படத்தை அவரே தயாரித்து, இயக்கி, நடித்து உள்ளார். இப்படம் இன்று (மே 19) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது.

பிச்சைக்காரன் 2 படத்தின் ஓடிடி வெளியீடு உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தமிழ், தெலுங்கு உரிமைகளை பெரும் விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிச்சைக்காரன் 2 ஜூன் மூன்றாவது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பிச்சைக்காரன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காவ்யா தாபர். தேவ்கில், ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விபத்து மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் ஈசினிமா படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அவர் சிறிது நேரத்தில் உயிர் தப்பினார். பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்