பிக்பாஸிற்குள் போட்டியாளராக வந்த கழுதை.. உள்ளூர் பிரச்சனை உலக பிரச்சனை ஆனது இப்படித் தான்..
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18ல் கழுதை ஒன்றை பராமரிக்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதை பீட்டா கண்டித்துள்ளது.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கூடுதல் சுவாரசியத்திற்காக கழுதை ஒன்று, கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளது. இது மக்களிடையே பேசுபொருளான நிலையில், அதுகுறித்து, பீட்டா, சல்மான் கானுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பீட்டா கடிதம்
அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் விலங்குகளை அடைத்து வைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை அளிக்கிறது. அதுமட்டுமின்றி இது வருத்தமளிக்கும் செயல். ஒரு விலங்கை தங்களின் நிகழ்ச்சியின் விளம்பரத்திற்காகவும் அதை காமெடி பொருளாகவும் பயன்படுத்திக் கொள்வது சரியானது அல்ல. இனி பொழுது போக்கிற்காக விலங்குகளை பயன்படுத்துவதை பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்த வேண்டும் என பீட்டா அமைப்பு நடிகர் சல்மான் கானிடம் அறிவுறுத்தியுள்ளது.
ஹிந்தி பிக்பாஸ் சென்ற தமிழ் பிரபலம்
கடந்த ஞாயிற்றுக் கிழமை சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசன் கலர்ஸ் டிவியில் தொடங்கியது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஸ்ருதிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர், நடிகர் சூர்யாவுடன் ஸ்ரீ படம், ஆல்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் கூட.