திருச்சிற்றம்பலம் பட மூன்று நாள் வசூல் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திருச்சிற்றம்பலம் பட மூன்று நாள் வசூல் என்ன?

திருச்சிற்றம்பலம் பட மூன்று நாள் வசூல் என்ன?

Aarthi V HT Tamil Published Aug 21, 2022 11:36 AM IST
Aarthi V HT Tamil
Published Aug 21, 2022 11:36 AM IST

திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

<p>திருச்சிற்றம்பலம் வசூல்</p>
<p>திருச்சிற்றம்பலம் வசூல்</p>

ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியான தனுஷ் படத்தை ரசிகர்கள் ஆதவராக வரவேற்றனர். என்ன தான் 4 மணி காட்சி திருச்சிற்றம்பலம் படத்திற்கு கிடைக்கவில்லை என்றாலும், முதல் காட்சியை திருவிழா போல் கொண்டாடினர். 

இந்த படத்தின் வெற்றி மூலம் மீண்டும் தனுஷுக்கு ஒரு ஹிட் கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

 அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 23 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதுதவிர உலகம் முழுவதும் இதுவரை 32 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.