'மந்தையில் இருந்த 2 ஆடுகள்.. சந்தித்துக்கொண்டபோது பேசமுடியவில்லையே.. தனுஷ் - நயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்
'மந்தையில் இருந்த 2 ஆடுகள்.. சந்தித்துக்கொண்டபோது பேசமுடியவில்லையே.. தனுஷ் - நயனை கலாய்க்கும் நெட்டிசன்கள் பற்றிய கட்டுரையைப் பார்ப்போம்.
நயன்தாரா, தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்தபின், நடிகர் தனுஷூம் நயன்தாராவும் ஒரே திருமண நிகழ்வில் பங்கேற்றிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நடிகை நயன்தாராவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் தளம் வெளியிடுவதாக இருந்து தாமதம் ஆனது. இந்நிலையில், அந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் பாடல்களை, இசையைப் பயன்படுத்த நடிகர் தனுஷ் அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதம் ஆனது எனவும், பயன்படுத்த 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரி தனுஷ் தரப்பில் கூறியதாகவும் தனுஷை சகட்டுமேனிக்கு நயன்தாரா நேரடியாக அட்டாக் செய்து கடந்த நவம்பர் 16ஆம் தேதி அறிக்கை விட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் நயன்தாரா தனுஷை, '’உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறோம்’’ என வெளிப்படையாக சாடினார்.
நானும் ரெளடி தான் வெற்றி உங்களை உளவியல் ரீதியாகப் பாதித்தது: நயன்தாரா
மேலும் நயன்தாரா, தனுஷை, ‘’ கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன்பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.
அந்தப் படத்தின் வெற்றி, உங்களை உளவியல்ரீதியாக வெகுவாகப் பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். பின்னர், சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது’’ என நடிகை நயன்தாரா நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும், நடிகர் தனுஷ் இன்னும் இதற்கு பகிரங்கமாக ரியாக்ட் செய்யவில்லை.
இந்நிலையில் தனுஷ் இயக்கும் இட்லிக்கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். ஆகாஷ் பாஸ்கரன், விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், விக்னேஷ் சிவனும், அவரது மனைவியுமான நடிகை நயன் தாராவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தற்போது வைரலாகும் புகைப்படத்தில், தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் பார்க்கக்கூடாது என்று முகத்தைத் திருப்பிவைத்து உட்கார்ந்து இருக்கின்றனர்.
புகைப்படத்திற்கு எதிர்வினையாக பெருங்களிப்புடைய ஜிஃப்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
'மந்தையில் இருந்த 2 ஆடுகள்.. சந்தித்துக்கொண்டபோது பேசமுடியவில்லையே.. தனுஷ் - நயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்
இதுதொடர்பாக கருத்துரைத்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘’ பறவைகள் அல்லது விலங்குகள் கடக்க முடியாத கண்ணுக்குத் தெரியாத கோட்டை என்னால் பார்க்க முடிகிறது" என கலாய்த்துள்ளார்.
மற்றொருவர், ‘’ அவர்களை ஒருவருக்கொருவர் அருகில் அமர வைத்தவர் தான் உண்மையான ஹீரோ. சேரை ஒதுக்கியவருக்கு பதவி உயர்வு கொடுங்க பாஸ்’’என எழுதியிருக்கிறார். இன்னொருவர், ‘ மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு ஆடுகள் சந்தித்துக்கொண்டபோது பேசமுடியவில்லையே’ என கலாய்த்துள்ளார்.
இதுதொடர்பாக சில நெட்டிசன்களின் கருத்துகள் பின்வருமாறு: “ஆஹா !! பைத்தியக்காரத்தனத்தின் மல்டிவர்ஸ்.. அவர்கள் கிட்டத்தட்ட ஒருவருக்கொருவர் அருகருகே உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பது பெருங்களிப்புடையது” என ஒரு நெட்டிசன் கிண்டலடித்துள்ளார். இன்னொருவர், ‘’அவர்கள் நேரில் சண்டையிடத் தொடங்கியதாக கற்பனை செய்து பாருங்கள்" எனக் கூறுகிறார்.
நயன்தாராவின் திருமண ஆவணப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது.
டாபிக்ஸ்