Maha Nadigai: இது அதுல்ல... அட்டை காப்பி அடிக்கும் டிவி... அடேங்கப்பா இவ்ளோ பெரிய லிஸ்டா? நெட்டிசன்கள் கிண்டல்
Maha Nadigai: விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை அட்டைக் காப்பி அடித்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்தபப்டுவதாக தொடர் விமர்சனங்கள் வந்த நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக மற்றொரு நிகழ்ச்சியையும் ஜி தமிழ் தொலைக்காட்சி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல், ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் விதமாகவும் புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருவதால் தான் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் இன்றளவும் குறையாமல் இருக்கிறது.
இதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் அதிகம் தான். இருப்பினும், விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கூட ஆங்கில மற்றும் ஹிந்தியில் வெளியான நிகழ்ச்சிகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டவை தான். இருப்பினும், அவை தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையே தருவதால் தான் இன்றளவும் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்துடன் விஜய் டிவி இன்றளவும் வெற்றி நடை போடுகிறது.
இது அதுல்ல
ஆனால், விஜய் டிவியைப் போன்றே தேசிய ஊடகமான ஜி டிவி தமிழ் மொழியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இது ரசிகர்களைக் கவர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் போன்றே பல நிகழ்ச்சிகளை தயாரித்தது. அதமட்டுமின்றி, விஜய் டிவியின் ரசிகர்களையும் தன் வசம் இழுக்க பல வேலைகளையும் செய்தது.