Hitler Trailer: பவர், பணம், தலைவன், தேர்தல்... அரசியலை நோக்கி செல்லும் ஹிட்லர்- வெளியானது விஜய் ஆண்டனி டிரைலர்
Hitler Trailer: இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, அரசியல் பின்புலம் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். “ஹிட்லர்” என பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியருமான விஜய் ஆண்டனி "நான்" என்ற கிரைம் திரில்லர் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர், சலீம், இந்தியா- பாகிஸ்தான், பிச்சைக்காரன் என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான "மழைப்பிடிக்காத மனிதன்" திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது அவர் அரசியல் பின்னணி கொண்ட "ஹிட்லர்" என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு ஆயுதம் உருவாகும்போதே அதன் இலக்கு தீர்மானிக்கப்படுகிறது
இந்த டிரைலரின் தொடக்கத்திலேயே "ஒரு ஆயுதம் உருவாகும்போதே அதன் இலக்கு தீர்மானிக்கப்படுகிறது..." எனும் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், பணம், பவர், கூட்டம், தலைவன் என வரும் வசனம் படத்திற்கான ஹைப்பை அதிகரிக்கிறது.
விஜய் ஆண்டனி ஏற்கனவே, கோடியில் ஒருவன் திரைப்படத்தில் தேர்தல், அரசியல் தொடர்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்தார். இந்நிலையில், அவர் மீண்டும் தேர்தல் அரசியல் தொடர்பான திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைக்கு வரும் தேதி
இப்படத்தை வானம் கொட்டட்டும் போன்ற திரைப்படங்களை இயக்கிய தனா இயக்கியுள்ளார். செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
பாசிசத்திற்கு எதிராக போராடும் நாயகன்
இத்திரைப்படத்தில் சகஜமான வாழ்க்கை சூழலை விரும்பிய விஜய் ஆண்டனி, அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுகிறார்.
இதைத்தொடர்ந்து, பாசிச ஆட்சியை நடத்தும் அரசியல்வாதிக்கு எதிராக போராடும் நபராக விஜய் ஆண்டனி உருவெடுத்துள்ளார். மேலும், காவல்துறை அதிகாரியாக கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். அரசியல் சூழ்ச்சியால் நடக்கும் கொலைகள், அதனால் ஏற்படும் விளைவுகளை திரைப்படம் வெளிகாட்டுகிறது.
"நாங்கள் செய்ததை மக்கள் நினைவில் வைத்திருந்தால், நாங்கள் எப்படி தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றோம்?" போன்ற வசனங்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹிட்லர் கருத்து சொல்லவில்லை
முன்னதாக நேற்று (செப் 18) ஹிட்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி, "படக்குழு பல தடைகளைக் கடந்து திரைப்படத்தை முடித்துள்ளது. திரைப்படத்தின் இயக்குநர் தனா அற்புதமாக படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இந்தப் படம் முழுக்க முழுக்க கமெர்ஷியல் திரைப்படம். இதில் மக்களுக்கு நாங்கள் எந்த கருத்தையும் சொல்ல வரவில்லை. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இத்திரைப்படம் அமையும். மேலும் இது ஜாலியான ஆக்ஷன் படமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.