கதறி அழும் குழந்தை.. ஒத்தையில நிக்கும் நயன்தாரா.. பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.
நடிகை நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் எனும் ஆவணப்படமும் வெளியாகி உள்ளது.
பூதாகரமாக மாறிய பிரச்சனை
இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் பிடிஎஸ் காட்சிகளை பயன்படுத்தியதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி பணம் கேட்டதற்காக நயன்தாராவும் அவரது கணவரும் தனுஷிற்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பல நடிகர்களும் நடிகைகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இதையடுத்து, தனுஷ் ஆதரவாளர்களும், நயன்தாரா ஆதரவாளர்களும் மாறி மாறி பல கருத்துகளை சொல்லி பிரச்சனையை பூதாகரமாக மாற்றினர்.
ராதிகா கருத்தால் வெடித்த சர்ச்சை
இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில், இன்று நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப்படம் வெளியானது. இதில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலில் விழுந்தது தெரிந்த தனுஷ், தன்னிடம் கோபமாக பேசினார் என ராதிகா கூறி இருக்கிறார். இது பிரச்சனையை மேலும் பெரிதாக்கியது.
நயன்தாராவின் அடுத்த படம்
இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் மற்றும் மூவிவெர்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
கதறும் குழந்தை
ஈட்டி, கதிர் அரிவாளுடன் கோபத்துடன் இருக்கும் நயன்தாரா, தன்னை தேடி வீட்டிற்கு வரும் கும்பலை சண்டையிட்டு துவம்சம் செய்கிறார். இவர் வீட்டில் எதிரிகளை வீழ்த்த திட்டம் தீட்டி அம்மியில் மிளகாயை இடித்து வருகிறார். அப்போது கதறி அழும் குழந்தையை கண்டுகொள்ளாமல் நிதானமாக மிளகாயை இடிக்கும் அவர் பின், சங்கில் பாலை ஊற்றி குழந்தைக்கு அளிக்கிறார்.
ஒற்றை ஆளாய் களம் காணும் நயன்தாரா
இதையடுத்து, குழந்தை அழுகையை நிறுத்தியதும், வீட்டிற்கு வெளியில் சூழ்ந்து நிற்கும் எதிரிகளை ஒற்றை ஆளாய் சமாளித்து, சண்டையிட்டு, அவர்களின் உயிரைப் பறிக்கிறாள்.
பின் ரத்தம் தெறித்த முகத்துடன் கோபமாக அனைவரையும் பார்த்து தன் கையில் வைத்திருக்கும் ஈட்டியும் அறிவாளும் சேர்ந்து இருக்கும் கம்பை கீழே நிறுத்தி எச்சரிக்கிறார். பின், தான் இடித்து வைத்திருந்த மிளகாய் பொடியை எதிராளிகள் மேல் தூவுகிறாள்.
ராக்காயி நயன்தாரா
இப்படி ரத்தம் தெரிக்கும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்திற்கு படக்குழு ராக்காயி எனப் பெயர் சூட்டியுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நயன்தாரா, நீதி மட்டுமே நினைவாக இருக்கும் ஒரு இடத்தில், ஒரு தாய் தன் குழந்தையே உலகம் என நினைத்து வாழ்ந்தாள்.
ஆனால், ஒரு அரக்கனால் தன் மகளுக்கு துன்பம் வரும் என அறிந்த பின் அவள் ஓடி ஒளிந்துகொள்ள வில்லை. அதே சமயம் மகளுக்காக போராட அவள் தளர்ந்ததும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைரலாக்கும் ரசிகர்கள்
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தின் டைட்டில் டீசரை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்