"புரொடியூசருக்கு என் மியூசிக் மேல நம்பிக்கை இல்ல.. பாசத்த விட புகார் தான் நிறைய இருக்கு" டிஎஸ்பி ஆதங்கம்
புஷ்பா 2 இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளருக்கும் தனக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மேடையிலேயே அத்தனை பேர் முன்னிலையிலும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் நேற்று முன்தினம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் இசை வெளியீட்டு விழா 'வைல்டு பயர்' எனும் பெயரில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அல்லு அர்ஜூன் தமிழில் பேசியது, ராஷ்மிகா மந்தனா தன் வருங்கால கணவர் குறித்து பேசியது என பல விஷயங்கள் பரபரப்பானது.
படத்திலிருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்
இந்த நிலையில் தான், புஷ்பா 2 இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பார் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா 2 படத்தில் பின்னணி இசைப் பணிகளை மேற்கொள்ளாத நிலையில், தற்போது நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் தயாரிப்பது மைத்ரி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தான்.
இசை வெளியீட்டு விழாவில் கோபமடைந்த டிஎஸ்பி
இதற்கிடையில், தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிவையில், இசை வெளியீட்டு விழாவில் தேவி ஸ்ரீ பிரசாத் பேசிய விஷயங்களின் மூலம் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளால் தான் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார் எனத் தெரிய வருகிறது.