தமிழ் செய்திகள்  /  Entertainment  /  The Film Team Discovered The Film Blue Star With The Fans!

Blue Star : ’மொரட்டு அன்பிற்கு நன்றி’.. ரசிகர்களுடன் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை கண்டுகளித்த படக்குழு!

Divya Sekar HT Tamil
Jan 27, 2024 09:50 AM IST

ப்ளூ ஸ்டார் படத்தை ரசிகர்களுடன் நடிகர் சாந்தனு, நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கண்டுகளித்தனர்.

ப்ளூ ஸ்டார்
ப்ளூ ஸ்டார்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தா இசையமைத்து இருக்கிறார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அறிவு மற்றும் உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கின்றனர்.

இந்தப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் ரியல் லைஃபிலும் ஜோடியாக இணைந்திருக்கின்றனர். குறிப்பாக இந்தப்படத்தில் இருவரும் நடித்த ‘உந்தன் கை வீசிடும்’ பாடல் சமூகவலைதளங்களில் வைரலானது.

புளூ ஸ்டாரின் தயாரிப்பாளர்கள், வியாழன் அன்று படம் வெளியாவதற்கு முன்னதாக, அவர்களின் புகழ்பெற்ற பாடலான 'ரயிலின் ஒலிகள்' வீடியோவை புதன்கிழமை யூ-டியூப் தளத்தில் வெளியிட்டனர். படத்தில் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்வது போல் இந்தப் பாடலில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த பாடலை பிரதீப் குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். இப்பாடலுக்கான வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். ப்ளூ ஸ்டார் படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் பிருத்விராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டது. எஸ்.ஜெயக்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.

பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, பாலாஜி பிரசாத், ராகவ், ஷாஜி, தாமு, ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயபெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர். நீலம் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் புளூ ஸ்டார் தயாராகி உள்ளது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார், செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வீதியோர துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லெமன் லீஃப் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பா. ரஞ்சித், ஆர் கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

வட தமிழகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட இளம் தலைமுறையினரின் விளையாட்டுத் திறமையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருப்பதாலும், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் வழங்குவதாலும் திரையுலகினரிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தை ரசிகர்களுடன் நடிகர் சாந்தனு, நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கண்டுகளித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசோக்செல்வன் தனது எக்ஸ் தளத்தில், “”எங்கள் மீது பொழிந்திருக்கும் அளப்பரிய மொரட்டு அன்பிற்கு பார்வையாளர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி! #BlueStar எனக்கும் எனது குழுவிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இது நம் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல லட்சிய திட்டங்களை மேற்கொள்ள எனக்கு நம்பிக்கை அளித்ததற்கு மீண்டும் நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்!”என பதிவிட்டுள்ளார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் வெறும் 60 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார இறுதியில் படம் பெரிதாக பிக்கப் ஆகுமா என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

அதேபோல இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாக்‌ஷி சவுத்ரி, சத்யராஜ், லால், ஜான் விஜய், கிஷன் தாஸ் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ், அரவிந்த் சாமி மற்றும் ஜீவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் 1 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 4 நாட்கள் விடுமுறை என்பதால் 4 கோடி வசூலை முதல் வாரத்தில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.