Ashok Selvan: கிஸ் அடிக்க மறந்த அசோக் செல்வன்.. இயாக்குநர் சொன்ன சுவாரஸ்ய தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ashok Selvan: கிஸ் அடிக்க மறந்த அசோக் செல்வன்.. இயாக்குநர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

Ashok Selvan: கிஸ் அடிக்க மறந்த அசோக் செல்வன்.. இயாக்குநர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

Aarthi V HT Tamil
Nov 29, 2023 10:40 AM IST

ஓ மை கடவுளே படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் பற்றி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி அளித்து உள்ளார்.

ஓ மை கடவுளே
ஓ மை கடவுளே

அவர் திரையுலக பயணத்தில் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தமான படம் என்றால் அது ஓ மை கடவுளே தான். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்து இருப்பார்கள். இந்த படம் பார்த்த பிறகு இது போன்ற தோழி நமக்கு இல்லையே என பலரும் ஏங்கினார்கள்.

இதனிடையே கலாட்டா யூடியூப் சேனலில் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து பேட்டி அளித்து இருக்கிறார்.

அதில், “ மீராவின் பிறந்தநாளில் சர்ப்பிரஸ் கொடுக்க வேண்டும் என அனுவை அழைத்துக் கொண்டு ஆர்ஜுன் அவர் ஊருக்குச் செல்வார். அப்போது தங்கும் விடுதியில் இருவருக்கும் ஒரு ஷாட் வைக்கப்பட்டது.

அனு மேல் அர்ஜுனுக்கு காதல் வந்துவிடும். அப்போது அனு தூங்குவதை அர்ஜுன் பார்த்து கொண்டே இருப்பார். அனு முழித்துக் கொண்டு என்ன பண்ற, தூங்கு காலையில மிக விரைவாக எழுந்து போக வேண்டும் என சொல்வார்.

அந்த இடத்தில் அனுவிற்கு முத்தம் கொடுக்க வேண்டும். அந்த சீன் நான் தான் எடுத்தேன். கேமரா மேன் தூங்கிக் கொண்டு இருக்கிறான். நானும் கேமரா மேன் உதவியாளர் மட்டும் இருக்கிறோம். அப்போது திடீரென குறட்டை சத்தம் வருகிறது.

என்ன நடக்கிறது என பார்த்தால் உடனே எழுந்து என்ன மச்சான் சரியாக நடித்தேனா? கேரக்டர் உள்ளே சென்று நடித்தேன் என மொத்தமாக மாற்றிவிட்டான். தயாரிப்பாளர் என்பதால் என்னால் அவரிடம் எதுவும் கேட்கவும் முடியவில்லை. இறுதியில் அதை சொல்லிவிட்டு தூங்கிவிட்டார். இப்படி தான் அந்த சீன் நடந்தது என மிகவும் நகைச்சுவையாக ” கூறினார்.

ஓ மை கடவுளே படம் 2020 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. புது முக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்த திரைப்படம், காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவையாக இருந்தது.

தற்போது வளர்ந்து வரும் காலத்தில் விவாகரத்து என்ற பெயரில் கணவன், மனைவி பிரிவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அது நடக்காமல் அவர்களை எப்படி புரிந்து நடந்து கொள்வது என்பதை மிக அழகாக காண்பித்த காரணத்தினால் படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது. வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.