சம்பளம் இல்லையாம்.. சாப்பாடு கொடுத்த போதுமாம்.. பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்.. தாய் சொன்ன தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சம்பளம் இல்லையாம்.. சாப்பாடு கொடுத்த போதுமாம்.. பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்.. தாய் சொன்ன தகவல்!

சம்பளம் இல்லையாம்.. சாப்பாடு கொடுத்த போதுமாம்.. பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்.. தாய் சொன்ன தகவல்!

Divya Sekar HT Tamil
Nov 14, 2024 08:36 AM IST

பிரணவ் மோகன்லால், விவசாய பண்ணையில் வேலை பார்ப்பதாக அவரது தாயார் சுசித்ரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி ஸ்பெயினிலுள்ள பண்ணை ஒன்றில் மோகன்லால் மகனும் நடிகருமான பிரணவ் வேலை பார்த்து வருகிறார்.

சம்பளம் இல்லையாம்.. சாப்பாடு கொடுத்த போதுமாம்.. பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்.. தாய் சொன்ன தகவல்!
சம்பளம் இல்லையாம்.. சாப்பாடு கொடுத்த போதுமாம்.. பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்.. தாய் சொன்ன தகவல்!

ஹிருதயம் படத்தில் ஹீரோவாக

இதில், பிரணவ் மோகன்லால் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் கிடைத்தது. பிரணவ் மோகன்லால் 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவர் குழந்தையாக இருந்தபோது அப்பாவின் ஒன்னமன் மற்றும் புனர்ஜனி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். பின்னர், அவர் 2018ல் ஆதி என்ற திரைப்படத்திலும், 2022ல் ஹிருதயம் என்ற திரைப்படத்திலும் நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், பிரணவ் மோகன்லால், விவசாய பண்ணையில் வேலை பார்ப்பதாக அவரது தாயார் சுசித்ரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி ஸ்பெயினிலுள்ள பண்ணை ஒன்றில் மோகன்லால் மகனும் நடிகருமான பிரணவ், வேலை பார்த்து வருகிறார். மோகன்லாலின் மகனான பிரணவ், வித்தியாசமானவர். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடிப்பார். அதில் வாங்கும் சம்பளத்தைக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். 3 மாதம் 4 மாதம் என வெளிநாடுகளில் இருப்பார். 

தேவையான உதவிகளை செய்வாராம்

ஜாலியாக டூர் கொண்டாட அவர் அங்கு போவதில்லை. மாற்றாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழக்க வழக்கங்கள், கலாசாராம், மக்களை அறிந்துகொள்ள வழிப்போக்கன் போல் அவர் அந்நாடுகளுக்கு செல்கிறார். அங்கு சென்றதும் நடைபயணமாக பல கி.மீ. தூரம் நடந்து செல்வாராம். அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வாராம்.

இரவு நேரத்தில் சாலையோரம் படுத்து தூங்குவார். பிறகு நாடு திரும்பியதும், மற்ற நடிகர்களைப் போல், படப்பிடிப்பில் பங்கேற்பாராம். இவர் வழிப்போக்கனாக மாறிவிட்டால், இந்தியாவிலிருந்து யாரும் இவரை தொடர்புகொள்ளவே முடியாதாம். இப்போது அவர் ஸ்பெயினில் ஒரு ஊரில் ஆடு, மாடு குதிரைகள் வளர்க்கும் ஒரு பண்ணையில் வேலை பார்த்து வருகிறாராம்.

சம்பளம் எதுவும் வாங்கவில்லையாம்

இதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லையாம். உணவு, இருப்பிடம் மட்டும் கொடுத்தால் போதும் என தனது முதலாளியிடம் கூறிவிட்டாராம். அங்குள்ள ஆடு, மாடுகள், குதிரைகள் ஆகியவற்றை அவர் பராமரித்து வருகிறார். இது குறித்து மோகன்லாலின் மனைவி சுசித்ரா கூறும்போது, ‘பயணம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு அந்த அனுபவங்களை என்னிடம் பிரணவ் சொல்லுவான். அவன் இதுபோல் இருப்பது அவனுக்கு பிடித்திருக்கிறது. அதனால் அவனை எதுவும் சொல்லாதே என மோகன்லால் சொல்லிவிட்டார். அவனும் தனது பணத்தில்தான் இதையெல்லாம் செய்வேன் என்கிறான். அதற்காக மட்டுமே அவன் சினிமாவில் நடிக்கிறான்’ என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.