“ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க..”! மாடு எங்களுக்கு தெய்வம் - கையெடுத்து கும்பிட்ட நிக்க கல்ராணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க..”! மாடு எங்களுக்கு தெய்வம் - கையெடுத்து கும்பிட்ட நிக்க கல்ராணி

“ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க..”! மாடு எங்களுக்கு தெய்வம் - கையெடுத்து கும்பிட்ட நிக்க கல்ராணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 09, 2024 03:59 PM IST

விலங்குகள் தத்தெடுப்பது பற்றி பேசியதோடு, அதற்கு நிதி வழங்க பலரும் முன் வர வேண்டும் என்று கூறிய நிக்கி கல்ராணி, மாடு எங்களுக்கு தெய்வம் போன்றது, அதை சாலையில் விட வேண்டும் என கையெடுத்து கும்பிட்டுள்ளார்.

“ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க..”! மாடு எங்களுக்கு தெய்வம் - கையெடுத்து கும்பிட்ட நிக்க கல்ராணி
“ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க..”! மாடு எங்களுக்கு தெய்வம் - கையெடுத்து கும்பிட்ட நிக்க கல்ராணி

விலங்குகளை பராமரிக்க நிதியுதவி வழங்க வேண்டும்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நிக்கி கல்ராணி கூறியதாவது, "விலை உயர்ந்த நாய்களை வாங்கி வீட்டில் பராமரிப்பது போன்று காடுகள் மற்றும் பூங்காக்களில் பராமரிக்கப்படும் உயிரினங்களையும் நாம் தத்தெடுக்கலாம். அந்த விலங்குகளுக்கு தேவையானவற்றை வழங்க நிதியுதவி வழங்கி பராமரிக்க முன்வர வேண்டும்.

நீங்கள் தத்தெடுக்கும் விலங்கு பூனையாகவோ புலியாகவோ கூட இருக்கலாம். விலங்குகளுக்கு உணவு மட்டுமின்றி மருத்துவ செலவும் தேவைப்படுகிறது. நாம் அவற்றை தத்தெடுப்பதன் மூலம் அவை பூர்த்தியாகிறது.

எனக்கு பரிசாக வந்த பிராணிகள்

சின்ன வயதில் இருந்தே எனக்கு மிருகங்களை மிகவும் பிடிக்கும். அது நாய், பூனை என்றில்லை. எந்த விலங்காக இருந்தாலும் பாசத்தை வெளிப்படுத்துவேன்.

எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளது. நமக்கு பிடித்த விலங்குகளை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம். நான் நாய்களை காசு கொடுத்து வாங்கவில்லை. எனக்கு பரிசாக வந்ததை நான் வளர்த்து கொண்டிருக்கிறேன். அதுதான் குட்டி போட்டு தற்போது பெருகியுள்ளது.

ப்ளீஸ் அப்படி செய்யாதிங்க

சாலைகளில் மாடுகளை விடுவது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுவும் ஒரு உயிர்தான். சாலையில் மாடுகளை விடாதீர்கள். நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம். அது போல் சாலையில் மாடுகளை விடுகிறீர்கள் என்றால், ப்ளீஸ் அப்படி செய்யாதிங்கன்னு சொல்ல விரும்புறேன்" என்றார்.

இதை சொல்லும்போது நிக்க கல்ராணி கையெடுத்து கும்பிட்டவாறு கோரிக்கை வைத்தார்.

முன்னதாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை நடிகை நிக்கி கல்ராணி பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள விலங்குகள் பல்வேறு நபர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதைப்பற்றி பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்த அவர், விலங்குகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயரைக் கூறி அழைத்தார். அத்துடன், விலங்குகளின் பராமரிப்பாளர்களடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிக்கி கல்ராணி படங்கள்

மலையாளத்தில் வெளியான 1983 படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. கன்னட, தெலுங்கு சினிமாக்களில் பிரபலமான சஞ்சனா கல்ராணியின் சகோதரியான நிக்கி கல்ராணியும், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழில் டார்லிங் படம் மூலம் அறிமுகமான இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.

மிருகம், ஈரம், மரகத நாணயம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்த நடிகர் ஆதியை கடந்த 2022இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட நிக்கி கல்ராணி, பின்னர் விருந்து என்ற படத்தில் நடித்தார். மலையாளம், தமிழில் இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.