'அவங்களுக்கு எல்லாம் கவலையே கிடையாது.. சத்தம் கேட்டுட்டு இருந்தா போதும்' பங்கமாய் கலாய்த்த விஜய் சேதுபதி
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் எப்படி விளையாடி வருகிறார்கள் என்பதை ஒரு சின்ன பட்டாசு உதாரணத்தைக் கூறி கிண்டலடித்துள்ளார் விஜய் சேதுபதி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 4வது வாரத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கடந்த 5 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் என்னென்ன நடந்தது, போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை எப்படி கொண்டு சென்றனர். அவர்கள் கையாண்ட உக்திகள் என்ன, அது சரியா என்பது குறித்து சனிக்கிழமையான இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் ஆலோசிப்பார்.
தீபாவளி முடிந்து சுடசுட வந்த விஜய் சேதுபதி
அந்த வகையில், தீபாவளி முடிந்த உடன் வரும் இந்த நிகழ்ச்சியை பட்டாசு உதாரணத்துடன் ஆரம்பித்துள்ளார் விஜய் சேதுபதி. அதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
இந்த ப்ரோமோவில், தீபாவளி கொண்டாட உடையாக வேட்டி சட்டையுடன் வந்துள்ளார் விஜய் சேதுபதி. அப்போது பேசிய அவர், கொண்டாட்டத்தில் இருப்பவர்களுக்கு எந்த வெடி நன்றாக வெடித்தது. எந்த வெடி நன்றாக வெடிக்கவில்லை என்ற கவலை எல்லாம் இல்லை. அவர்களுக்கு வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கணும். ஆனால், வேடிக்கை பார்த்த நமக்கு இது சரியாக வெடிக்கவில்லை, இது சரியாக வெடித்தது என தெரிவிக்க வேண்டிய வேலை இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
25 நாட்களை கடந்து தீபாவளி கொண்டாட்டம்
ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை எல்லாம் பந்தாடி வரும் விஜய் சேதுபதி, இன்று ஏதோ தரமான சம்பவம் செய்ய உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.
முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வெற்றிகரமாக 25 நாட்களை நிறைவு செய்துள்ளனர். இதனை போட்டியாளர்கள் அனைவரும் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர். தீபாவளியை முன்னிட்டும், பிளடி பெக்கர் படத்தின் புரொமோஷனுக்காகவும் நடிகர் கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவருடன் தான் போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டமால் டுமீல் பட்டாசு, நமத்துப் போன பட்டாசு
தீபாவளி கொண்டாடிய போட்டியாளர்கள் அனைவரும் உண்மையான பட்டாசுகளை வெடித்த நிலையில், பிக்பாஸ் டாஸ்க் மூலம் வீட்டில் சண்டையை கொளுத்திப் போட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள டமால் டுமீல் பட்டாசு யார்? நமத்துப் போன பட்டாசு யார்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவிக்குமாறு டாஸ்க் வழங்கி போட்டியாளர்கள் மத்தியில் பிரச்சனையை உண்டாக்கும் வேலையில் பிக்பாஸ் இறங்கி இருந்தது.
ஆள் மாறாட்டத்தில் வெளிப்பட்ட வன்மம்
அதுமட்டுமின்றி, ஏற்கனவே, ஆள் மாறாட்ட டாஸ்க்கில் பலரும் தங்கள் மனதில் வைத்திருந்த வன்மத்தை தீர்த்து வந்த நிலையில், இப்போது யார் எதற்கெடுத்தாலும் கத்துகிறார், யார் இருக்கும் இடம் தெரியாமலேயே இருக்கிறார் என்ற தௌனியில் டமால் டுமீல் பட்டாசு, நமத்துப் போன பட்டாசு என போட்டியாளர்களை பிரித்து அடுத்த கலவரத்தை உண்டாக்கியது.
இவை அனைத்தையும் வெளியில் இருந்து கவனித்து வந்த விஜய் சேதுபதி, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெடித்த பட்டாசு, யார் வெடிக்காத பட்டாசு எனக் கூறி சம்பவம் செய்யக் காத்திருக்கிறார் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்