Manmadha leelai Movie: மலரும் நினைவுகளில் ‘மன்மத லீலை‘
47 years of Manmadha leelai: கமலஹாசன் நடித்த மன்மத லீலை படம் வெளியாகி 47 ஆண்டுகளாகிறது. அந்தப்படம் குறித்த ஒரு பார்வை.
‘மன்மத லீலை‘ 1976ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. பாலச்சந்தரின் இயக்கத்தில கமலஹாசன், ஆலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். தெலுங்கில் மன்மத லீலா என்றும் இந்தியில் மீத்தி மீத்தி பாட்டின் என்றும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான படம்.
படத்தின் கதாநாயகனான மது, திருமணத்திற்கு பின் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். அதில் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் அடங்குவர். மன்மதனான கதாநாயகனைப்பற்றிய படம் என்பதால் படம் மன்மத லீலை, இப்படத்தை பிஆர் கோவிந்தராஜன், ஜே.துரைசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். அதில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், நாதமெனும் கோவிலிலே பாடல்கள் ஹிட்டானது.
இது ஒரு கட்டத்தில் அவரது மனைவி ரேகாவுக்கு தெரியவரும். அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும். ஆனால், கமல் தன்னை மாற்றிக்கொள்ளவோ, திருத்திக்கொள்ளவோ எண்ண மாட்டார். அதனால் ரேகா அவரை விட்டு விலகிச்சென்றுவிடுவார். கணவரை பிரிந்த காலத்தில் தனது தாய் வீட்டில்தான் ரேகா தங்கியிருப்பார். அப்போது தனது தந்தை, அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் உதவியாளருடன் தகாத உறவில் ஈடுபடுவார். இதுகுறித்து தெரியவந்த ரேகா அதிர்ச்சி அடைகிறார். ஆனால் ரேகாவின் தாயோ, ஆண்களே அப்படித்தான் இருப்பார்கள், நாம்தான் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
ஆனால், ரேகாவால் அதை ஏற்க முடியவில்லை. அவரது தந்தையின் நடவடிக்கைகள் தெரிந்த பின்னர் அந்த வீட்டில் இருக்கவும் முடியவில்லை. விவாகரத்து கோரியிருப்பார். அந்த நேரத்தில் அவர் கருவுற்றிருப்பார். என்ன செய்வது எனத்தெரியாமல் அவர் குழம்பியிருப்பார். அந்த நேரத்தில் மதுவுக்கும் அது மகிழ்ச்சியைக்கொடுக்கும் செய்தியாக இருக்கும். அப்போது மது திருந்திவிடுகிறார். அதையடுத்து ரேகா தனது கணவருடன் சேர்ந்து வாழ்கிறார். இதுதான் இப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தில் தான் நடிகர் ராதா ரவி அறிமுகமானார். மேலும் முதல் முறையாக ஒய்.ஜி.மகேந்திரன் கமலுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
டாபிக்ஸ்