தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Upcoming South Ott Releases In April 2024: Premalu, Manjummel Boys, Hanuman

OTT Releases In April: ‘மஞ்சும்மல் பாய்ஸ் முதல் பிரேமலு வரை.. எப்போது..? எந்த ஓடிடி? - ஏப்ரல் மாத ஓடிடி படங்கள் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 03, 2024 05:43 PM IST

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாகவும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.130 கோடி வரை வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

 ஏப்ரல் மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்!
ஏப்ரல் மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உட்பட பலர் நடித்த மலையாள படம் ‘பிரேமலு’. பிப்ரவரி 9 ம் தேதி வெளியான இந்த திரைப்படம் மக்களிடம் அமோகமான வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த வகையில், இப்படம் இம்மாதம் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பார்க்கும் வசதியும் இருக்கிறது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாகவும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.130 கோடி வரை வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 

மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்திற்கு கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தப்படம் உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத்திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 2ம் தேதி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஹனுமான். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்தப் படம் வரும் 5ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக இருப்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சலாம் படம் எவ்வளவு பெரிய சோகத்தை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த பான் இந்தியா திரைப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோக்களாக, ரஜினி கெஸ்ட் ரோலில் தோன்றினார். இந்த திரைப்படம் சன் நெக்ஸ்டில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் நடிகர் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் போன்ற பிற துறைகளில் நடித்துள்ள சைரன் திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிறது.

உண்மையில், இந்த படம் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று முதலில் செய்திகள் வந்தன, ஆனால் பின்னர் அது தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்