இது பச்ச துரோகம்.. என் காசு கூட வேணாம்.. நிறைய ஏமாந்தாச்சு... - விரக்தியில் டி டி எப் வாசன்!
மஞ்சள் வீரன் இயக்குனர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக டி டி எப் வாசன் பேசி இருக்கிறார்.

தன்னை ‘மஞ்சள் வீரன்’திரைப்படத்தில் இருந்து தூக்கியது துரோகம் என்று டிடிஎஃப் வாசன் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மஞ்சள் வீரன் இயக்குனர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக டி டி எப் வாசன் பேசி இருக்கிறார்.
மஞ்சள் வீரன் திரைப்படத்தை பொறுத்த அளவுக்கு, ஒரே ஒரு போட்டோ ஷூட் மற்றும் பட பூஜை மட்டுமே நடந்திருக்கிறது. பட பூஜைக்கும், அவர்களது அலுவலக முன்பணத்திற்கும் நான்தான் பண உதவி செய்தேன். நான் அதற்காக பணத்தை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் கூற மாட்டேன். அவர் நெருக்கடியில் இருப்பதை என்னால் உணர முடிந்த காரணத்தால் நான் என்னால் முடிந்த உதவியை அவருக்குச் செய்தேன்.
காசு வேண்டாம்
அந்தக் காசெல்லாம் எனக்கு தற்போது திரும்ப வேண்டாம். போன் அடித்தால் அவர் எடுக்காமல் உடன் இருப்பவரை வைத்து பேச வைப்பதற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம். அதற்காகத்தான் நான் சொல்கிறேன். படத்தின் 30 சதவீத வேலைகள் முடிந்த நேரத்தில் நான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தாக பேசி இருக்கிறார். அது பொய்.
நான் பதிலடி கொடுப்பேன்
நான் கொடுத்த காசை வைத்து நீங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வாருங்கள். அது எனக்கு சந்தோசம்தான். என்னுடைய வாழ்க்கையில் என்னிடம் இருந்த நிறைய விஷயங்களை நான் இழந்து இருக்கிறேன்; எவ்வளவோ விஷயங்களில் நான் ஏமாந்து இருக்கிறேன். இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகிறதோ என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தை செய்த அவர்களுக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பேன்” என்று பேசினார்
முன்னதாக, அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக மாற்றி ட்வின் த்ரோட்லர்ஸ் எனும் தன்னுடைய யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன்.
இவருக்கு யூடியூப்பில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஒன்றில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இதையடுத்து, இணையத்தில் டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் டிடிஎஃப் வாசன் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுதல், ஜிபி முத்துவை பைக்கில் உட்காரவைத்து 150 கிமீ வேகத்தில் சென்றது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் கொடுத்த நேர்காணல்களும் பரபரப்பை கிளப்பியது.

டாபிக்ஸ்