இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம்..பிவிசியூ சினிமாட்டிக் யுனிவெர்சில் உருவாகும் மகாகாளி
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமாக மகாகாளி படம் உருவாக இருக்கிறது. இதுபற்றி அறிவித்திருக்கும் பிரசாந்த் வர்மா, இந்த படம் தனது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்சில் இணையும் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவராக இருந்து வரும் பிரசாந்த் வர்மா, முதன் பெண் சூப்பர் ஹீரோ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு பிரசாந்த் திரைக்கதை எழுத பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குகிறார். இவர் கடந்த ஆண்டில் வெளியான அரசியல் நய்யாண்டி படமான மார்டீன் லூதர் கிங் படத்தை இயக்கியுள்ளார்.
மகாகாளி கான்செப்ட் விடியோ
இந்த படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கும் பிரசாந்த் வர்மா தனது பதிவில், "ஆர்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரபஞ்சத்துக்கு சக்திவாய்ந்த புதிய சக்தியை கொண்டு வர இருக்கிறோம். #மகாகாளியின் எழுச்சி உங்கள் முன்னிலையில் வழங்குகிறோம்.
தீமையை மிகக் கடுமையாக அழிப்பவளான காளி தேவியின் உருவகமாக படம் உருவாக இருக்கிறது. இந்த நவராத்திரியில், ஒரு சூப்பர் ஹீரோ எப்படி இருக்க முடியும் என்பதை காட்ட உள்ளோம்." என குறிப்பிட்டுள்ளார்.