WEEKEND OTT MOVIES: தனுஷின் ராயன், கல்கி..இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்
Weekend OTT Movies to Watch: தனுஷின் ராயன், பிரபாஸ் நடித்த கல்கி படம் உள்பட இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ் எவை என்பதை பார்க்கலாம்.
உங்கள அபிமான ஓடிடி தளங்களில் இந்த வாரம் சில புதிய படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளிலும் படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து வீக்கெண்ட் நாளை பொழுதுபோக்காக கழிக்கும் விதமாக என்னனென்ன படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ராயன்
தனுஷ் இயக்கி, நடித்த ஓடிடி ரிலீஸ் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ராயன் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெறும் வாட்டர் பாக்கெட் பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதையடுத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த ராயன் படத்தை தற்போது ஓடிடியிலும் ரசிக்கலாம்.
இந்தியன் 2
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் நடித்திருக்கும் படம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக ரசிகர்களை கவரவில்லை. இதையடுத்து ஓடிடி தளத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளியானது.
அதன் பின்னரும் படத்தை பலர் ரோஸ்ட் செய்த நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படம் நாள்தோறும் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு வரும் படமாக உள்ளது.
கல்கி 2898 ஏடி
பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் த்ரில்லர் படமான கல்கி 2898 ஏடி இந்தி பதிப்பு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பதிப்புகள் அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியிடப்பட்டுள்ளன.
தி ஆங்கிரி யங்க மேன்
இந்த ஆவணப்படத் சீரிஸ் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்பட்டது. 'ஆங்கிரி யங் மென்' என்ற தலைப்பு, 70களில் உருவாக்கப்பட்ட கோபமான இளைஞன் ஹீரோ-டைப் இரட்டையர்களைக் குறிக்கிறது.
அமிதாப் பச்சன் முக்கிய ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் சலீம் கான்-ஜாவேத் அக்தர் ஆகியோரின் பங்களிப்பை பேசும் விதமாக இருக்கும் இந்த ஆவணத் தொடரை சல்மான் கான் பிலிம்ஸ், எக்செல் மீடியா & என்டர்டெயின்மென்ட் மற்றும் டைகர் பேபி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
மனோரதங்கள்
மலையாள வெங்சீரஸான மனோரதங்கள் ஆகஸ்ட் 15 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயரின் ஒன்பது கதைகளை அடிப்படையாகக் கொண்டது. சமீபத்தில், வலைத் தொடர் 10 நாட்களில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் குவித்து ஒரு மைல்கல்லை எட்டியது.
மோகன்லால், மம்முட்டி, ஃபகத் பாசில், கமல்ஹாசன் உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த தொடரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஃபாலோ கர் லோ யார்
ஃபாலோ கர் லோ யார் என்பது ஸ்கிரிப்ட் செய்யப்படாத நிகழ்ச்சியாகும், இது ஆகஸ்ட் 23 அன்று அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த தொடர் சோஷியல் மீடியா சென்சேஷனான உர்பி ஜாவித் வாழ்க்கையைப் பற்றிய இன்சைடு லுக்காக அமைந்துள்ளது. அவரது தேடுதல், அவரை கவனத்தில் வைத்திருக்கும் சர்ச்சைகள் உட்பட அவரை சார்ந்த விஷயங்களை கொண்டதாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்