தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalaivar171: ரஜினியின் 171 ஆவது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. உறுதிப்படுத்திய சன் பிக்சர்ஸ்

Thalaivar171: ரஜினியின் 171 ஆவது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. உறுதிப்படுத்திய சன் பிக்சர்ஸ்

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 11, 2023 11:21 AM IST

நடிகர் ரஜினி காந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் தலைவர் 171 படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தலைவர் 171
தலைவர் 171

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் ரஜினி காந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் தலைவர் 171 படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் ஆரம்ப கட்ட கணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் ரஜினி காந்த் தலைவர் 171 படத்தில் இணைவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படம் 580 கோடி வசூல் கண்ட நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார். இதில் அனிரூத் இசை அமைக்க உள்ளார் என்று கூறப்பட்டுள்து.

முன்னதாக தலைவர் 171 படத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் விலகியதாக தகவல்கள் வெளியானது. தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்