OTT Release: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியவர் மடோன் அஸ்வின். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் தமிழில் 75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
போர் தொழில்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஆர்.சரத்குமார், அசோக் செல்வன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம், போர் தோழில் புதிய போலீஸ் ஆட்சேர்ப்பு ஒரு தொடர் கொலைகாரனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்படம் சோனி லைவ் தளத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது.
ஹார்ட் ஆஃப் ஸ்டோன்
ஆலியா பட் நடித்த ஹாலிவுட் திரைப்படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிறது. கேல் கடோட் மற்றும் ஜேமி டோர்னன் நடித்த இந்தப் படத்தை டாம் ஹார்பர் இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
வான் மூன்று
ஏஎம்ஆர் முருகேஷ் இயக்கத்தில், வான் மூன்று படத்தில் டெல்லி கணேஷ், லீலா சாம்சன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்று ஜோடிகளையும் அவர்களது உறவுகளையும் சுற்றியே படம் நகர்கிறது. காதல் வயது வரம்புகளை எப்படி மீறுகிறது என்பது இந்தப் படத்தில் காட்டப்பட்டு உள்ளது. ஆஹா தளத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
Zombieverse (கொரிய தொடர்)
வலி நிவாரணி
பிஹைண்ட் யுவர் டச்
முதலில் மகளிர்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9