Today Tamil Movies : ஜோதிகா நடித்த மகளிர் மட்டும்.. அர்ஜூன் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!-list of movies released today 15 september 2024 like jyothika magalir mattum arjun ritham - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Tamil Movies : ஜோதிகா நடித்த மகளிர் மட்டும்.. அர்ஜூன் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

Today Tamil Movies : ஜோதிகா நடித்த மகளிர் மட்டும்.. அர்ஜூன் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

Divya Sekar HT Tamil
Sep 15, 2024 09:18 AM IST

Today Tamil Movies : ஜோதிகா முக்கிய வேடத்திலும், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா நடிப்பில் வெளியான மகளிர் மட்டும், அர்ஜூன், மீனா,ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Today Tamil Movies : ஜோதிகா நடித்த மகளிர் மட்டும்.. அர்ஜூன் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!
Today Tamil Movies : ஜோதிகா நடித்த மகளிர் மட்டும்.. அர்ஜூன் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

ரிதம்

தமிழ் சினிமா சில காலங்களில் தரமான படைப்புகளை உருவாக்கும். பல புதிய பரீட்சார்த்த படங்களுக்கு வாய்ப்பு அளிக்கும். அத்தகைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகியும் காலம் கடந்தும் நிற்கும். அப்படியொரு படம் தான், ரிதம். காலங்கள் கடந்து தமிழ் விழுமியக் கூறுகளை, மனித மனங்களின் வழியாக காதல் எனும் பரிபாஷையில் உரையாடல் நிகழ்த்திய திரைப்படம். இப்படத்தை இயக்குநர் வஸந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அர்ஜூன், மீனா,ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ், வத்சலா ராஜகோபால், லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் 5 விதமான பாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. இவை 5 விதமான பஞ்சபூதங்களின் சாயலில் படமாக்கப்பட்டுள்ளன. இதனை எழுத்துக்களில் வைரம் தீட்டியவர், கவிஞர் வைரமுத்து. மொத்தத்தில் இப்படத்தின் ஆல்பம், சூப்பர் டூப்பர் ஹிட்.

கோலங்கள்

1995 இல் வெளிவந்தத் திரைப்படம் கோலங்கள். இதனை ஐ. வி. சசி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயராம் மற்றும் குஷ்பூ ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹென்றி இதனைத் தயாரிக்க, இளையராஜா இசையமைத்தார். 1995 செப்டம்பர் 15 அன்று இப்படம் வெளியானது.

பாலைவன பறவைகள்

பாலைவன பறவைகள் என்பது செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் உதயன், தரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையகங்கை. இத்திரைப்படம் 1990 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது.

16 வயதினிலே

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜாவின் முதல் படம். அதுமட்டுமல்ல பாரதிராஜா - இளையராஜா காம்போ, கமல்ஹாசன் - இளையராஜா காம்போ, ரஜினி வில்லனாக தோன்றிய முதல் கலர் படம் என பல்வேறு முதல் விஷயங்களை உள்ளடக்கிய படமாக 16 வயதினேலே உள்ளது. கிராமத்தில் வாழும் 16 வயது பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் நல்லதும், கெட்டதுமான சம்பவங்கள் தான் படத்தின் ஒன்லைன். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாச அனுபவத்தை தந்தது இந்தப் படம்.

அன்னமிட்ட கை

தமிழ் சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு. மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 இதே நாளில் வெளியான திரைப்படம் 'அன்னமிட்ட கை'. எம்.ஜி.ஆர்., நம்பியார் , ஜெயலலிதா ஆகியோர் நடித்த பிளாக் அன்ட் ஒயிட் திரைப்படம். இப்படத்தை எம்.கிருஷ்ணன் இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர்., நடித்த இத்திரைப்படம், இரு மாற்றான் தாய் மகன்களின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. கே.வி.மகாதேவனின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன.

கண் கண்ட தெய்வம்

கண் கண்ட தெய்வம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா, பத்மினி, நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 15 செப்டம்பர் 1967 இல் வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் பாந்தவியாலு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.