டாப் 10 சினிமா.. தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர்.. நீங்கள் ரொம்ப போரான ஆள்.. விவாகரத்து குறித்து ஜெயம் ரவி ப்ளீச்!
'Good Bad Ugly’ படத்தில் நடிகர் அஜித்துடன் இணைவது குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சிப் பதிவு, ’லப்பர் பந்து’ படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிம்பு என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர் - துஷாரா விஜயன்
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் தனுஷ் மீது தவறான கிசுகிசுக்களையும் குற்றச்சாட்டுகளையும் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் பொய்யானவை. தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர். நடிப்பின் மீது அவர் அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார் என கூறினார்.
'Good Bad Ugly’ படத்தில் நடிகர் அஜித்துடன் இணைவது குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சிப் பதிவு!
அஜித் தற்போது நடித்து வரும் குட் பேட் அக்லீ படம் விறுவிறுப்பாக ஷூட்டிங் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது. மேலும் பிரசன்னாவும் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் அஜித் உடன் நடித்து இருப்பது பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
10 நிமிட குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
LCU-ன் தோற்றம் குறித்து ’CHAPTER ZERO' என்ற 10 நிமிட குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ரஜினியை வைத்து கூலி படம் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அவர் இயக்கத்தில் வெளியான கைதி, இன்றுடன் வெளியாகி 5 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட லோகேஷ் யூனிவர்ஸ் உருவாக்க இந்தப் படம்தான் காரணம் என படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.இதையடுத்து தற்போது எல்.சி.யு. தொடர்பான புது அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதாவது, எல்.சி.யு.-வின் முன்னுரை குறித்து ஒரு 10 நிமிட குறும்படம் உருவாக்கவுள்ளதாகவும் சேப்டர் ஜீரோ என்ற தலைப்பில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.