விவாகரத்து பஞ்சாயத்து..என் வீட்டுக்குள்ள என்ன நடந்தா உங்களுக்கு.. "பிரச்சினையோட ஆழம் தெரியாம” - ஓப்பனாக பேசிய ஜெயம் ரவி
ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவு குறித்து பொதுவெளியில் பேசப்படுவதை ஜெயம் ரவி காட்டமாக பேசி இருக்கிறார்.

என் வீட்டுக்குள்ள என்ன நடந்தா உங்களுக்கு என்ன? - "பிரச்சினையோட ஆழம் தெரியாம” - ஓப்பனாக பேசிய ஜெயம் ரவி!
ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து தற்போது கோலிவுட்டின் பரபரப்பு பேச்சுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த மறுநாளே என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ரவியை எத்தனையோ முறை தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்த பின்னர் கூட, அவர் அதற்கு உடன்படவில்லை என்றும் ரவி மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், ஆர்த்தி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதனையடுத்து மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர் என்னுடைய அமைதி பலவீனம் ஆகாது என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், ஜெயம்ரவி தன்னுடைய பர்சனல் விவகாரம் பொதுவெளியில் பேசப்படுவது குறித்து கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.