ரஜினி- கமல் ஆகியோரை கமர்சியல் கிங்காக மாற்றியவர்.. தமிழ் சினிமாவின் கலை சிற்பி எஸ்பி முத்துராமன் பிறந்தநாள் இன்று!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குனர் கே பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்றால் மாஸ், ஸ்டைல் என பதிய வைத்தது எஸ் பி முத்துராமன் தான்.

இயக்குனர் எஸ் பி முத்துராமன் தனது சினிமா பயணத்தை பாடல் ஆசிரியர் கண்ணதாசன் உதவியாளராக இருந்து தொடங்கினார். 1970, 80 காலகட்டத்தில் எஸ் பி முத்துராமன் கமர்சியல் இயக்குனராக வளம் வந்தார். இவர் முன்னணி இயக்குனராக இருந்த பீம்சிங், ஏசி திரிலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் உதவியாளராக இருந்து தனது பயணத்தை தொடங்க ஆரம்பித்தார் எஸ்பி முத்துராமன்.
இதனைத் தொடர்ந்து எஸ் பி முத்துராமன் ஏவிஎம் நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்தார்.பின்னர் காலப்போக்கில் அந்த நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.. ஏவிஎம்மில் தயாரிக்கப்படும் படம் என்றாலே அதில் பெரும்பாலும் முத்துராமன் தான் இயக்குனராக இருப்பார். அங்கு வரும் பெரும்பாலான படங்களை எஸ்.பி. முத்துராமன் தான் இயக்குவார். இவர் டைரக்ஷன் பணியை மட்டுமே திறம்பட செய்து வந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குனர் கே பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்றால் மாஸ், ஸ்டைல் என மக்கள் மனதில் பதிய வைத்தது எஸ் பி முத்துராமன் தான்.