Kushboo: மூட்டு வலியால் அவதி..மேடையில் கீழே விழுந்த குஷ்பூ - பொருப்படுத்தாமல் ஆடிய டான்ஸ்! வைரலாகும் விடியோ-kushboo slipped down while on dancing in dancing during tv artist award function held at kerala - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kushboo: மூட்டு வலியால் அவதி..மேடையில் கீழே விழுந்த குஷ்பூ - பொருப்படுத்தாமல் ஆடிய டான்ஸ்! வைரலாகும் விடியோ

Kushboo: மூட்டு வலியால் அவதி..மேடையில் கீழே விழுந்த குஷ்பூ - பொருப்படுத்தாமல் ஆடிய டான்ஸ்! வைரலாகும் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 28, 2024 10:20 AM IST

மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நடிகை குஷ்பூ, விருது நிகழ்ச்சியில் மேடையில் ஆடும்போது கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. வலியுடன் தொடர்ந்து நடனமாடியா குஷ்பூவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

Kushboo: மூட்டு வலியால் அவதி..மேடையில் கீழே விழுந்த குஷ்பூ - பொருப்படுத்தாமல் ஆடிய டான்ஸ்! வைரலாகும் விடியோ
Kushboo: மூட்டு வலியால் அவதி..மேடையில் கீழே விழுந்த குஷ்பூ - பொருப்படுத்தாமல் ஆடிய டான்ஸ்! வைரலாகும் விடியோ

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரு மகள்களுக்கு தாயாக இருந்து வரும் குஷ்பூ தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருவதுடன், பாஜக கட்சி உறுப்பினராகவும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

சின்னத்திரை நடிகர்களுக்கான விருது விழா

கேரளாவில் தனியார் டிவி சேனல் சார்பில் நடத்தப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை குஷ்பூ கலந்து கொண்டார். அப்போது குஷ்பூவை மேடைக்கு அழைத்து உரையாடியபோது, அவரை நடனம் ஆடுமாறு தொகுப்பாளர் கேட்டுகொண்டார்.

இதை ஏற்றுக்கொண்டு நடனமாடிய குஷ்பூ, திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி, ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர். இதை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மூட்டு வலியிலும் ஆட்டத்தை தொடர்ந்த குஷ்பூ

பின்னர் ஆட்டத்தை நிறுத்தி குஷ்பூ பேசும்போது, "அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு மூட்டு வலி பிரச்னை உள்ளது. அதன் காரணமாகத்தான் விழுந்துவிட்டேன்.

என்னால் இந்த நிகழ்ச்சி தடைபட வேண்டாம், பாடலை ஒலிபரப்புங்கள் நான் ஆடுகிறேன்" என்றார். அதன் பின் மீண்டும் ஒலிபரப்பான பாடலில் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் நடனமாடி கலக்கினார். குஷ்பூவின் இந்த செயலுக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று தலைவணங்கினர். அவரது தன்னம்பிக்கையையும் வெகுவாக பாராட்டினார்.

இந்த நடன விடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் குஷ்பூ, “மேடையில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் உங்கள் ஆர்வத்துக்கான சான்றாகும். எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, நீங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் குஷ்பூ பகிர்ந்த இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

சினிமாக்களில் வாய்ப்புக்கான வலை குறித்து குஷ்பூ பேச்சு

சினிமாக்களில் காஸ்டிங் கவுச் எனப்படும் வாய்ப்புக்கான வலையில் பல பெண்கள், குறிப்பாக நடிகைகள் சிக்குவதுண்டு. சமீபத்தில் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் கூட சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லாமல் இருப்பது குறித்து சொல்லப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதி்ர்வலையை கிளப்பியதோடு, பிரபல நடிகர்கள் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டது.

இது குறித்து தந்தி யூடியூப் சேனலுக்கு அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “சினிமாவுக்கு வரும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது என்பது நான்கு சுவருக்குள் நடக்கிறது.அனைவரும் கூடி இருக்கும் சபையில் அது போன்ற நிகழ்வுகள் நடப்பதில்லை.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வரும் பெண்களிடம் இருக்கும் வேட்கையை, இங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக, தங்களது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இப்போது சினிமாவுக்கு வரும் பெண்கள் நன்கு படித்து, பட்டம் பெற்று, தெளிவான அறிவுடன் வருகிறார்கள். அப்படி திரைத்துறைக்குள் நுழையும் பெண்கள், இது போன்ற பிரச்னைகளை லாவகமாக கையாண்டு விடுகிறார்கள்.

குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவுக்கு வரும் பெண்கள்

ஆனால் முன்பு அப்படி இல்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் தான் வீட்டில் உலை கொதிக்கும், தம்பி தங்கைகளை படிக்க வைக்க முடியும், இல்லையென்றால் எனக்கு சினிமா தான் வேண்டும் என்று சொல்லி, வீட்டில் சண்டைபோட்டுவிட்டு வரும் பெண்களை இங்கிருப்பவர்கள் தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

நானும் அப்படிப்பட்ட ஒரு கட்டாய சூழ்நிலையில் தான் சினிமாவுக்கு வந்தேன். வீட்டில் அம்மா இருக்கிறார். மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். அப்பா குடும்பத்தை கைவிட்டு விட்டார். கையில் பெரிதாக படங்கள் இல்ல. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ஒரு தயாரிப்பாளர் என்னை மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தார்.

வாய்ப்புக்காக தரம் தாழ்த்தியது கிடையாது

அப்போது நான் அவரிடம் அதற்கு உடன்பட மறுத்து, என்னுடைய செருப்பு சைஸ் 41 நீங்கள் இங்கே அடி வாங்கிக் கொள்கிறீர்களா?, இல்லை யூனிட் முன்னே அடி வாங்குகிறீர்களா என்று கேட்டேன். அப்போது எனக்கு 16 வயது. கன்னடம், தமிழில் கூட நான் படங்கள் நடிக்கவில்லை. தெலுங்கில் மட்டும் தான் நான் நடித்துக் கொண்டிருந்தேன். என்னை படுக்கைக்கு அழைத்தது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் தான். வாய்ப்புக்கான எந்த இடத்திலும் நான் என்னை தரம் தாழ்த்தியது கிடையாது” என்று பேசினார்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.