Suruli Rajan: தனித்துவமான குரல்..நகைச்சுவை சூறாவளி.. எதார்த்த காமெடியன் சங்கரலிங்கம் சுருளிராஜன் ஆன சுவாரஸ்ய பின்னணி-know about the name secret of vetran comedy actor suruli rajan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suruli Rajan: தனித்துவமான குரல்..நகைச்சுவை சூறாவளி.. எதார்த்த காமெடியன் சங்கரலிங்கம் சுருளிராஜன் ஆன சுவாரஸ்ய பின்னணி

Suruli Rajan: தனித்துவமான குரல்..நகைச்சுவை சூறாவளி.. எதார்த்த காமெடியன் சங்கரலிங்கம் சுருளிராஜன் ஆன சுவாரஸ்ய பின்னணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 03, 2024 01:45 PM IST

Suruli Rajan Name Secret: தனித்துவமான குரல் வளம் கொண்ட நடிகராக இருந்து வந்த சுருளிராஜன், நகைச்சுவை சூறாவளி என்ற பெயரால் அழைக்கப்பட்டார். எதார்த்த காமெடியனாக திகழ்ந்த வந்த இவரது நிஜப்பெயர் சங்கரலிங்கம் சுருளிராஜன் என மாறிய சுவாரஸ்ய பின்னணியை பார்க்கலாம்

Suruli Rajan: தனித்துவமான குரல்..நகைச்சுவை சூறாவளி.. எதார்த்த காமெடியன் சங்கரலிங்கம் சுருளிராஜன் ஆன சுவாரஸ்ய பின்னணி
Suruli Rajan: தனித்துவமான குரல்..நகைச்சுவை சூறாவளி.. எதார்த்த காமெடியன் சங்கரலிங்கம் சுருளிராஜன் ஆன சுவாரஸ்ய பின்னணி

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் தொடங்கி ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற அப்போதைய டாப் நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் தோன்றி கலக்கியுள்ளார். ஜெய்சங்கர், ரஜினி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

1980ஆம் ஆண்டில் மட்டும் இவரது நடிப்பில் 40க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த காமெடியன் என்ற சாதனை படைத்தவராக உள்ளார்.

மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் மகா கஞ்சனாக இவர் நடித்த காமெடி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைபோல் காமெடி தமிழ் சினிமாவில் இதுவரை வராத விதமாக இவரது மாந்தோப்பு கிளியே பட காமெடி அமைந்துள்ளன.

சங்கரலிங்கும் சுருளி ராஜன் ஆன கதை

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சுருளிராஜன் ஒரிஜினல் பெயரானது சங்கரலிங்கம். சிறுவயதில் அவருக்கு சுருளிவேலர் சுவாமி கோயிலில் தலைமுடி எடுத்துள்ளனர். இதன் பின்னர் சாமி பெயராக சுருளி என்றே பலரை அழைத்து வந்தனர்.

அந்த நேரத்தில் சுருளி என்ற பெயரில் பலரும் இருந்த நிலையில், தனது தாயாரிடம் இதுபற்றி அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் சுருளி என்பதை சுருளி ராஜா என்ற மாற்றியுள்ளார் அவரது தாயார். அப்படித்தான் நான் சுருளி ராஜன் என மாறினேன் என அவரே பலபேட்டிகளில் கூறியுள்ளார். அத்துடன் அவர் நிஜ பெயரும் காணாமல் போனது.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தனது ஒரிஜினல் பெயரை விடுத்து புனைப்பெயருடன் நுழைந்த நடிகராக மாறிய சுருளி ராஜனுக்கு நகைச்சுவை சூறாவளி என்கிற பட்டத்தையும் சினிமாவில் நடித்த பின்பு பெற்றார்.

நாடகம் டூ சினிமா பயணம்

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களின் ஒருவராக திகழும் சுருளி ராஜன், ஓஏகே தேவர், டிஎன் பாலு, பிசிர் ராமாராவ் போன்ற பல்வேறு ட்ரூப்களில் நடித்துள்ளார். இவர் நாடகத்தில் ஒன்றில் நடித்தபோது அன்று கலெக்‌ஷன் ஆன பணத்தை எடுத்துகொண்டு டிக்கெட் கொடுத்தவர் எஸ்கேப் ஆகியுள்ளார். அந்த நேரத்தில் கையில் காசு இல்லாமல் அனைவரும் பட்னியாக இருந்தபோது, சுருளி ராஜன் நடித்த நாடகத்தை பார்க்க வந்த தயாரிப்பாளர் அவரது நடிப்பை பாராட்டியதுடன், தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி ரூ. 100 அட்வானஸை கொடுத்துள்ளார்.

முதல் முறையாக ரூ. 100 பணத்தை பார்த்த அவர், பட்னியுடன் நடந்தே வீட்டுக்கு சென்று அதை தனது தாயாரிடம் காட்டியுள்ளார்.

அதேபோல் ஓஏகே தேவர் நாடகத்தில் நடித்தபோது தாயாரின் இறப்பு செய்தி தந்தி வருகிறது. துக்கத்தை மறக்கும் மக்களை சிரிக்க வைக்கும் தனது கேரக்டரை நடித்து முடித்த பின்னரே தாயின் சடங்குகளை செய்ய புறப்பட்டார். இவரது இந்த அர்பணிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.

மற்றொரு சம்பவமாக ஏ.பி. நாகராஜன் நாடக்கத்தில் நடித்த போது, மனைவி பிரசவ வலி தந்தி வருகிறது. அப்போது இயக்குநர் நாகராஜன் முருகன் போல் குழந்தை பிறப்பார் என வாழ்த்த, நாடகத்தை முடித்து விட்டு சென்ற சுருளிராஜனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஜெயசங்கர் நடித்த இரவும் பகலும் தான் சுருளிராஜன் நடித்த முதல் படம். ரவிச்சந்திரன் நடித்த நான் படத்தில் ஹீரோயினான ஜெயலலிதாவின் தந்தை கேரக்டரில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார்.

சுருளிராஜன் - ரஜினி காம்போ

சினிமாவில் சத்யராஜுடன் நெருக்கமானவராக இருந்துள்ளார் சுருளிராஜன். சத்யராஜ் திருமணத்துக்கு ஆலோசனை வழங்கியவர்களில் ஒருவராக இருந்துள்ளார். முதலில் திருமணத்துக்கு தயக்கம் காட்டி அப்புறமாக மாமா பெண்ணை திருமணம் செய்தார் சத்யாராஜ்.

மாமா பொண்ணை கல்யாணம் பன்னிக்கிட்டால் வாடகைக்கு வீடு, சாப்பிட சாப்பாடு என எல்லாம் கிடைத்து விடும். அப்புறம் வந்து நடிப்பது மட்டுதான் உன் வேலை என சுருளிராஜன் நகைச்சுவையை சொன்னது தான் சத்யராஜ் திருமணம் செய்ய சம்மதிக்க காரணமாக இருந்ததாம்.

சுருளிராஜன் - ரஜினி காம்போ இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் காமெடிகளை கொடுத்துள்ளனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து பைரவி, தாய் மீது சத்தியம், தர்மயுத்தம், அன்புக்கு நான் அடிமை, ப்ரியா, ஜானி, காளி, முரட்டு காளை என பல படங்களில் தோன்றியுள்ளனர்.

தனித்துவமான கீச் கீச் குரல், பாடிலாங்குவேஜ் சோலோவாகவும், முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து காமெடியில் கலக்கியதோடு நடிப்பு சூறாவளி என்ற பட்டத்தையும் பெற்ற காமெடி நடிகராக இருந்து வரும் சுருளிராஜன் 1980ஆம் ஆண்டு மறைந்தார். இவர் மறைந்த பின்னர் தமிழ்நாடு அரசு சிறந்த காமெடியன் விருதை சுருளிராஜனுக்கு அளித்ததோடு, 1985ஆம் ஆண்டு வரை இவர் நடித்த படங்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.