தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Suruli Rajan: ‘சோலோ கிங்.. ஆளே கிங்.. அசத்தும் கிங்..’ சுருளிராஜன் என்கிற மகா கலைஞன்!

HBD Suruli Rajan: ‘சோலோ கிங்.. ஆளே கிங்.. அசத்தும் கிங்..’ சுருளிராஜன் என்கிற மகா கலைஞன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 14, 2024 04:40 AM IST

நடிகர்களே ரசிகர்களாக இருக்கும் அளவிற்கு தனித்துவம் கொண்ட நகைச்சுவை நடிகராக சுருளிராஜன் திகழ்ந்தார்.

சுருளி ராஜன் பிறந்த நாள்
சுருளி ராஜன் பிறந்த நாள்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் பொதுவாக கதையின் நாயகர்களை தாண்டி நகைச்சுவை நடிகர்கள் அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் அமர்ந்து விட முடியாது. 

ஆனால் அதை எல்லாம் கடந்து தமிழ் ரசிகர்களிடையே தன்னை பிணைத்து கொண்ட  நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர் சுருளிராஜன். 

சுருளிராஜன் 1938 ஜனவரி 14 அன்று தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் என்ற ஊரில் பொண்ணையாபிள்ளை என்பவரின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம் என்பதை திரைப்பட உலகத்துக்காக சுருளிராஜன் என்று மாற்றி கொண்டார்.

இவர் தந்தை இறந்த பிறகு மதுரையில் இருக்கும் சகோதரர் வீட்டில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார்.  ஒரு மெக்கானிக் செட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு திடீரென சினிமாவின் மேல் ஆர்வம் வந்துள்ளது. தனது கலை உலக வாழ்க்கையை நாடகங்களில் தொடங்கினார்.

பின்னாளில் திரைப்பட வாய்ப்புகள் தேடி சென்னை வந்தார். கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். சென்னையிலும் பல நாடகங்களில் நடித்தார். 1965 ல் தயாரிப்பாளர் ஜோசப் அவர்களின் இரவும் பகலும் திரைப்படம் மூலம் 1965 ல் திரைப்பட உலகில் நுழைந்தார். பிறகு எம்.ஜி.ஆர். அவர்களின் இரண்டு படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இயக்குனர் டி. ஆர். ராமண்ணா முழுமையாக தனது படங்களில் பயன்படுத்தி இருந்தார். நகைச்சுவை கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ் காலகட்டம் என்று பட்டியல் போடலாம். 

அதுபோல சுருளிராஜன் காலகட்டம் என்று உருவானது. அவரது குரலும் உடல் மொழியும் அப்பாவித்தனமான நடிப்பும் யதார்த்தமும் ரசிகர்களிடம் அவரை எளிதில் கொண்டு போய் சேர்த்தது. அதிலும் மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் கஞ்சன் வேடத்தில் நடித்த கதாபாத்திரம் அவரை உச்சத்துக்கு கொண்டு போனது.

அதற்குப் பிறகு எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில் இவரது நடிப்பை கண்ட மக்கள் ரசிகர்களாக மாறத் தொடங்கியுள்ளனர். அதற்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாத காட்டாறாக அனைத்து விதமான படல்களிலும் நடிக்க தொடங்கினார். முக்கிய நடிகர்கள் மட்டுமல்லாது புதுமுக நடிகர்களோடும் சேர்ந்து நடித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் இவருடைய பயணம் மிகப்பெரியது ரஜினிகாந்துக்கு வெற்றி கொடுத்த அனைத்து படங்களிலும் இவரும் நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரமும் மிகப்பெரியதாக பேசப்பட்டது. அந்த அளவிற்கு அசாத்திய நடிப்பும், தனித்துவமான குரலும், நகைச்சுவை உடல் பாகமும் கொண்டவர் சுருளிராஜன்.

கையில் பிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் பிசியான நடிகராக உருவெடுத்தார் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 50 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் கேட்கும்போதே தலை சுற்றுகிறதா. அந்த அளவிற்கு மிகவும் பிஸியான நடிகராக இருந்துள்ளார்.

நடிகர்களே ரசிகர்களாக இருக்கும் அளவிற்கு தனித்துவம் கொண்ட நகைச்சுவை நடிகராக சுருளிராஜன் திகழ்ந்தார். சின்ன கலைவாணர் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் நடிகர் விவேக். இவரது குரலை மிமிக்ரி செய்து ஒரு திரைப்படத்தில் முழு கதாபாத்திரமாக நடித்திருப்பார். அந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றி நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்.

ரஜினி உட்பட பல முக்கிய நடிகர் களுடன் நகைச்சுவை மட்டும் அல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். இவருக்கு தமிழக அரசு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. 

இவ்வளவு பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் தனது 42 வது வயதிலேயே இறந்து போனது தான் பெரிய சோகம்.

இந்நிலையில் சுருளி ராஜனின் பிறந்த நாளானா இன்று அவர்குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது. 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்