Thangalaan: மகிழ்ச்சியோ.. மகிழ்ச்சி.. தங்கலான் 2 வருவது உறுதி - அடித்து சொன்ன விக்ரம்-chiyaan vikram confirms thangalaan 2 movie will be coming - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thangalaan: மகிழ்ச்சியோ.. மகிழ்ச்சி.. தங்கலான் 2 வருவது உறுதி - அடித்து சொன்ன விக்ரம்

Thangalaan: மகிழ்ச்சியோ.. மகிழ்ச்சி.. தங்கலான் 2 வருவது உறுதி - அடித்து சொன்ன விக்ரம்

Aug 17, 2024 07:40 AM IST Aarthi Balaji
Aug 17, 2024 07:40 AM , IST

Thangalaan: தங்கலான் அனைவருக்கும் பிடிக்கும் என்றும், அதனால்தான் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக கொண்டு வரப்படும் என்றும் விக்ரம் தெரிவித்தார். 

சியான் விக்ரம் நடித்த பீரியட் ஆக்ஷன் அட்வென்ச்சர் படமான தங்கலான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது. அதற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். 

(1 / 5)

தங்கலான் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு படக்குழு நேற்று (ஆகஸ்ட் 16) ஹைதராபாத்தில் நன்றி சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் நாயகன் விக்ரம் பேசினார். தங்கலான்  படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது உறுதி என்றார்.

(2 / 5)

தங்கலான் அனைவருக்கும் பிடிக்கும் என்றும், அதனால்தான் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக கொண்டு வரப்படும் என்றும் விக்ரம் தெரிவித்தார். "ஏன்னா நீங்க எல்லாரும் தங்கலானை லவ் பண்றீங்க.. பார்ட்-2 போடலாம்னு இருக்கோம். இதுகுறித்து நான், பா.ரஞ்சித், ஞானவேல் ஆகியோர் பேசினோம். உங்கள் ஆதரவைப் பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்கிறார் விக்ரம். 

(3 / 5)

ஸ்டுடியோ கிரீன் புரொடக்ஷன் ஹவுஸின் தலைமை நிர்வாக அதிகாரி தனுஞ்செயன் கூறுகையில், தங்கலான் ஒரு மாஸ்டர் பீஸ் போல உள்ளது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்த படம் கண்டிப்பாக ஆஸ்கர் ரேஸ் வரை படத்தை கொண்டு செல்லும்.

(4 / 5)

தங்கலான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.26.44 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தில் விக்ரமின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்