உண்மை அறிந்து மன்னிப்பு கேட்ட வேதவள்ளி.. வளர்ப்பு சரிதான்.. பாடம் எடுத்த கயல்.. இன்றைய எபிசோட்
அன்பு மேல் அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்ததை அறிந்த வேதவள்ளி கயல் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உண்மை அறிந்து மன்னிப்பு கேட்ட வேதவள்ளி.. வளர்ப்பு சரிதான்.. பாடம் எடுத்த கயல்.. இன்றைய எபிசோட்
கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து, கயல் அண்ணன் மூர்த்தி குறித்து விசாரித்து வந்த சமயத்தில் கயலின் அத்தை வேதவள்ளி அன்பு மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தவறான தகவலால் சண்டை
மூர்த்தி கத்திக்குத்துடன் வலி பொறுக்க முடியாமல் சரிந்ததைக் கண்ட அன்பும், ஷாலினியும் மூர்த்தியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மூர்த்திக்கு சிகிச்சை அளிக்க தாமதமாவதால் ஷாலினி அன்புவிடம் அழுததை பார்த்து, அவரது அம்மா வேதவள்ளியிடம் தவறான தகவல் கொடுக்கப்பட்டது.
அதை உண்மை என நம்பிய வேதவள்ளி, அன்பு என் மகளை கர்ப்பமாக்கி விட்டான் எனக் கூறி கயல் குடும்பத்தினரிடம் சண்டையிட்டு வந்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கயல் குடும்பத்தினர் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தவித்தனர்.
