தவிடுபொடி ஆகும் திட்டங்கள்.. கொதிக்கும் சிவசங்கரி.. கன்னி வெடி மேல் கால் வைக்கும் கயல்.. இந்த வார ஸ்பெஷல்
கயலிடமிருந்து அவரது குடும்பத்தையும் எழிலையும் பிரிக்க சிவசங்கரி போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாகிப் போன நிலையில், அவர் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார்.
கயல் தன் வீட்டிற்கு மருமகளாக வரக் கூடாது என்பதற்காக எழிலின் அம்மா சிவசங்கரி பல நுணுக்கமான திட்டங்களைத் தீட்டினார். கயல் எழிலை திருமணம் செய்யாமல் இருக்க தீபிகாவையும் அவரது அப்பாவையும் தூண்டிவிட்டார். தயாளனுடன் சேர்ந்து திருமணத்தை நிறுத்த பல சதி வேலைகளிலும் ஈடுபட்டார்.
அவருடன் சேர்ந்து கயலின் திருமணத்தை நிறுத்த அவரது பெரியப்பா, பெரியம்மா ஆகியோரும் பல சதித் திட்டங்களை தீட்டினர். இவை அனைத்தையும் சரிசெய்து ஒருவழியாக கயல் எழிலை திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து, கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து, கயல் அண்ணன் மூர்த்தி குறித்து விசாரித்து வந்தார்.
தவறான தகவலால் சண்டை
மூர்த்தி கத்திக்குத்துடன் வலி பொறுக்க முடியாமல் சரிந்ததைக் கண்ட அன்பும், ஷாலினியும் மூர்த்தியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மூர்த்திக்கு சிகிச்சை அளிக்க தாமதமாவதால் ஷாலினி அன்புவிடம் அழுததை பார்த்து, அவரது அம்மா வேதவள்ளியிடம் தவறான தகவல் கொடுக்கப்பட்டது.
அதை உண்மை என நம்பிய வேதவள்ளி, அன்பு என் மகளை கர்ப்பமாக்கி விட்டான் எனக் கூறி கயல் குடும்பத்தினரிடம் சண்டையிட்டு வந்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கயல் குடும்பத்தினர் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தவித்தனர்.
பின் மூர்த்தி கத்திக்குத்துடன் சிகிச்சை பெற்று வருவதயும், அவர் கயல் பெயரையும் அவரது மனைவி தனம் பெயரையும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்பதையும் அறிந்த கயல் இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.
அடுத்த பிரச்சனையை இழுத்துவிட்ட கயல்
இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மூர்த்திக்காக துடித்துவந்த நிலையில், புதிய பிரச்சனை ஒன்றை இழுத்துவிட்டிருந்தார் எழலின் அம்மா சிவசங்கரி. அப்போது தான், எழில் தனக்கு தீபாவளி சீராக நகைகள் போட வேண்டும் என கூறியதாக, சிவசங்கரி, மூர்த்தியிடம் நேரடியாக கூறியுள்ளார். இதைக் கேட்ட மூர்த்தி, செய்வது அறியாது நடந்தவற்றை அவரது மனைவி தனத்திடம் கூறியுள்ளார். இதை அவர்களது குழந்தை தூங்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறது.
உஷாரான கயல்
இதையடுத்து, எழில் மூலமாக ஏதோ பிரச்சனையை உண்டு பண்ண சிவசங்கரி முடிவு செய்துவிட்டதை அறிந்த கயல், நடுவீட்டில் அனைவர் முன்னிலையிலும் வைத்து எழிலிடம் பேசுகிறார். தீபாவளிக்கு பெண் வீட்டு சைடில் இருந்து செயின் போடணும்ன்னு நீ கேட்டியா என எழிலிடம் நேரடியாகவே கேட்டிருப்பார் கயல்.
நடு வீட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்ட எழில்
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எழிலின் அம்மா சிவசங்கரி பிரச்சனை நடக்கும் இடத்திற்கு ஓடி வந்து பார்ப்பார். அப்போது, எழில், அவரது அம்மாவிடம் நான் தீபாவளிக்கு நகை எதிர்பார்க்கிறேன்னு நீங்க மூர்த்திகிட்ட சொன்னீங்களா எனக் கேட்கிறார். இதையடுத்து எழிலுக்கும் அவரது அம்மாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் உண்மையை அறிந்த நிலையில், மீண்டும் அனைவரும் சந்தோஷமாகினர்.
சிவசங்கரியின் அடுத்த திட்டம்
இந்நிலையில், தான் போட்ட திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகிய நிலையில், இனி கயலிடமிருந்து எழிலையும் அவரது குடும்பத்தையும் எப்படி பிரிப்பது என தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறார். இந்த விஷயத்தில் இனி தயாளனை இனி நம்பப் போவதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளார். அதேசமயம் இனி, தனது அத்தை எடுக்கும் அனைத்து முடிவுகளையும் முறியடிப்பேன். என்னிடமிருந்து இனி யாரையும் பிரிக்க முடியாது என சபதமேற்றுள்ளார்.
டாபிக்ஸ்