Kayal Serial: குட்டையை குழப்பும் தீபிகா.. சிவசங்கரியிடம் நேராக சொல்லிய எழில் - கயல் சீரியல்-kayal serial episode promo on september 14 2024 indicates doubt on deepika - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: குட்டையை குழப்பும் தீபிகா.. சிவசங்கரியிடம் நேராக சொல்லிய எழில் - கயல் சீரியல்

Kayal Serial: குட்டையை குழப்பும் தீபிகா.. சிவசங்கரியிடம் நேராக சொல்லிய எழில் - கயல் சீரியல்

Aarthi Balaji HT Tamil
Sep 14, 2024 08:18 AM IST

Kayal Serial: கயல் வீட்டிற்கு திருமணத்திற்காக வந்து இருக்கும் பாட்டி ஒருவர், “ இவ்வளவு நாள் கஷ்டப்பட்ட கயலுக்கு, கூடவே பிறந்து இருப்பவர்கள் என்ன செய்ய போகிறார்கள், என்பதை பார்க்கலாம் “ என புது குண்டை வீசினார்.

Kayal Serial: குட்டையை குழப்பும் தீபிகா.. சிவசங்கரியிடம் நேராக சொல்லிய எழில் - கயல் சீரியல்
Kayal Serial: குட்டையை குழப்பும் தீபிகா.. சிவசங்கரியிடம் நேராக சொல்லிய எழில் - கயல் சீரியல்

மறுபக்கம் கயல் வீட்டிற்கு திருமணத்திற்காக வந்து இருக்கும் பாட்டி ஒருவர், “ இவ்வளவு நாள் கஷ்டப்பட்ட கயலுக்கு, கூடவே பிறந்து இருப்பவர்கள் என்ன செய்ய போகிறார்கள், என்பதை பார்க்கலாம் “ என புது குண்டை வீசினார்.

ஆனந்தி, எழிலுக்கு போன் செய்து, “ அந்த தீபிகா கண்ட விஷயங்களை பேசி குட்டையை குழப்ப பார்க்கிறாள் “ என கூறினார். மேலும் சீரியலில் என்ன நடக்கும் என்பதை விரிவாக சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.

நேற்றைய எபிசோட்

கயல் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ( செப் 13 ) திருமண பந்தக்கால் வைக்கும் நிகழ்வு நடக்கிறது. அப்போது தொலைவில் இருந்த தீபிகா, எழிலை பார்த்து கொண்டே இருந்தார். மேலும் சிறிது நேரம் கழித்து, எழில் அருகில் வந்து நின்று கொண்டு இருந்தார். அதை எழிலின் தந்தை பார்த்து, இது சரியில்லை என யோசிக்கிறார். 

மறுபக்கம் கயல் தனது தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றி இருக்கிறார். குடும்பம் முழுவதையும் தனது திருமணத்திற்காக அவர் ஒன்று சேர்த்து இருக்கிறார். இதனால் திருமண பந்தக்கால் வைக்கும் நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியாக மாறியது. எல்லாம் சரியாக இருந்தாலும் இந்த பெரியப்பா, பெரியம்மா மட்டும் மாறவே இல்லை. இன்னும் எப்படி திருமணத்தை நிறுத்துவது என்று தான் யோசித்து கொண்டு இருக்கிறார்.

நிறைய எதிரிகள் இருக்காங்க

எழில், “ என்னுடைய கல்யாணத்துல எங்களுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. அது எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு திருமண பந்தக்கால் வரை வந்து இருக்கிறோம். ஆனால் என் அப்பாவும், ஆனந்தியும், தீபிகாவால் கல்யாணத்தில் பிரச்னை வரும் என நினைக்கிறார்கள். விரைவில் தீபிகா யார் என்பதை நான் கண்டு பிடிப்பேன் “ என்றார் எழில்.

தீபிகா மேல் சந்தேகமாம்

ஆனந்தியும், எழிலுக்கு போன் செய்து, “ தீபிகா மேல் சந்தேகமாக இருக்கிறது. அவள் கல்யாணத்தை நடத்த வந்த Event Manager போல் தெரியவில்லை. கல்யாணத்தை நிறுத்த வந்து இருப்பது போல் இருக்கிறது “ என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.