Kayal Serial: லேடீஸ் பாத்ரூமில் பல்லிளித்த ஸ்மார்ட்ஃபோன்; அசிங்கப்பட்டு நிற்கும் அன்பு! - பரபரக்கும் கயல் சீரியல்!-kayal serial today promo episode on september 23 2024 indicates investigating who placed the anbu phone in the restroom - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: லேடீஸ் பாத்ரூமில் பல்லிளித்த ஸ்மார்ட்ஃபோன்; அசிங்கப்பட்டு நிற்கும் அன்பு! - பரபரக்கும் கயல் சீரியல்!

Kayal Serial: லேடீஸ் பாத்ரூமில் பல்லிளித்த ஸ்மார்ட்ஃபோன்; அசிங்கப்பட்டு நிற்கும் அன்பு! - பரபரக்கும் கயல் சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 23, 2024 07:34 AM IST

Kayal Serial: அன்பு பெயர் அசிங்கப்பட்டு நிற்கும் நிலையில், அந்த பிரச்சினையில் அன்பு குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆன பின்னரே, என்னுடைய கல்யாணம் நடக்கும் என்று கயல் கூறிவிட்டாள். - பரபரக்கும் கயல் சீரியல்!

Kayal Serial:  லேடீஸ் பாத்ரூமில் பல்லிளித்த ஸ்மார்ட்ஃபோன்; அசிங்கப்பட்டு நிற்கும் அன்பு! - பரபரக்கும் கயல் சீரியல்!
Kayal Serial: லேடீஸ் பாத்ரூமில் பல்லிளித்த ஸ்மார்ட்ஃபோன்; அசிங்கப்பட்டு நிற்கும் அன்பு! - பரபரக்கும் கயல் சீரியல்!

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

கடந்த எபிசோடில் கயலின் ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. அதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்த வடிவு, தர்மலிங்கம் மற்றும் எழிலின் சித்தி ஆகியோர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் எழிலின் சித்தி, அன்புவின் போனை அவனுக்கே தெரியாமல் எடுத்து லேடிஸ் பாத்ரூமில் வைத்து விட்டார். இந்த நிலையில் தற்செயலாக உள்ளே நுழைந்த ஒரு பெண்மணி ஒருவர் அதை பார்த்துவிட, அதை வெளியே எடுத்து வந்து பெரிய பிரச்சினை ஆக்கி விடுகிறார். அவர் உடன் அவரின் கணவரும் சேர்ந்து கொள்ள, கல்யாண வீட்டில் களேபரம் நடக்க தொடங்கி விட்டது. 

கயலின் சித்தி நகர்த்திய காய் 

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட கயலின் சித்தி, அதனை வைத்து  கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று, லேடிஸ் பாத்ரூமில் இதை வைத்தவனை சும்மா விடக்கூடாது. எவ்வளவு ஒரு கேவலமான காரியத்தை அவன் செய்திருக்கிறான் என்ற ரீதியில் பிரச்சினையை பூதாகரமாக மாற்ற, கயலின் தங்கை இது அன்புவின் போன் என்பதை கண்டுபிடித்து விட்டாள். தொடர்ந்து, இந்த விஷயத்தை அன்புவிடம் கொண்டு சென்றாள். இதற்கிடையே, இந்த விஷயத்தை எழிலின் சித்தி போலீசிடம் கொண்டு செல்லலாம் என்று மிரட்ட, அன்பு தானாக முன்வந்து அது தன்னுடைய போன் தான் என்றும் ஆனால் அதனை தான் பாத்ரூமில் வைக்கவில்லை என்றும் கூறினான். 

இந்த நிலையில், கயலின் சித்தி, அது எப்படி? உனக்கே தெரியாமல் போன் நடந்து வந்து லேடிஸ் பாத்ரூமில் உட்கார்ந்ததா? எவ்வளவு கேவலமான புத்தி உனக்கு, என்ற ரீதியில் அவனைத் தாக்க எல்லோரும் அன்பு அப்படிப்பட்டவன் அல்ல. அவனைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி ஆதரவு தெரிவித்தார்கள். 

ஆனாலும் விடாத கயிலின் சித்தி தாறுமாறாக வார்த்தைகளை விட்டு கயிலின் குடும்பத்தை அசிங்கப்படுத்தினாள். ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த எழில், இதற்கு மேல் நீங்கள் ஒரு வார்த்தை நீங்கள் பேசினால் நன்றாக இருக்காது என்று எச்சரிக்க, அவள் வாயை மூடினாள்.

இப்படியே பேசிக் கொண்டிருந்தால் பிரச்சினை தீராது என்றும் இதை சைபர் கிரைம் போலீசாரிடம் கொண்டு சென்றால், அவர்கள் மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, உண்மையான குற்றவாளி யார் என்பதை சரியாக கண்டுபிடித்து விடுவார்கள் என்று ஒரு முடிவுக்கு வர, கயலின் சித்திக்கு வயிற்றில் பயத்தில் புளி கரைகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தர்மலிங்கம், வடிவு மற்றும் கயலின் சித்தி ஆகியோர் பிலிப்பிதுங்கி நிற்க, அத்தோடு சனிக்கிழமை எபிசோடு முடிவடைந்தது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.