Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!-kayal serial episode today on september 13 2024 indicates ezhil got doubt - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!

Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!

Aarthi Balaji HT Tamil
Sep 13, 2024 08:38 AM IST

Kayal: " என் அப்பாவும், ஆனந்தியும், தீபிகாவால் கல்யாணத்தில் பிரச்னை வரும் என நினைக்கிறார்கள். விரைவில் தீபிகா யார் என்பதை நான் கண்டு பிடிப்பேன் “ என்றார் எழில்.

Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!
Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!

கயல் சீரியலின் இன்றைய ( செப் 13 ) எபிசோட்டிற்கான இரண்டு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. முதல் ப்ரோமோவில், எழில், “ என்னுடைய கல்யாணத்துல எங்களுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. அது எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு திருமண பந்தக்கால் வரை வந்து இருக்கிறோம். ஆனால் என் அப்பாவும், ஆனந்தியும், தீபிகாவால் கல்யாணத்தில் பிரச்னை வரும் என நினைக்கிறார்கள். விரைவில் தீபிகா யார் என்பதை நான் கண்டு பிடிப்பேன் “ என்றார் எழில்.

ஆனந்தியும், எழிலுக்கு போன் செய்து, “ தீபிகா மேல் சந்தேகமாக இருக்கிறது. அவள் கல்யாணத்தை நடத்த வந்த Event Manager போல் தெரியவில்லை. கல்யாணத்தை நிறுத்த வந்து இருப்பது போல் இருக்கிறது “ என்றார்.

நேற்றைய எபிசோட்

எழில், கயல் வீட்டின் முன்பாக நின்று கொண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வெளியே வா என்று சொல்லி அழைத்து செல்கிறார். நடு இரவில் வந்து எழில் எங்கே அழைத்து செல்கிறான் என்று தெரியாமல் குழப்பத்தில் செல்கிறார் கயல். கயல் கண்களை முடி ரொமண்டிக்காக சர்பரைஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுக்கிறார் எழில்.

கயல் கல்யாணத்தை நிறுத்துவதற்கான பேச்சில் வடிவும், தர்மலிங்கமும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை ராஜேஸ்வரி பார்த்துவிட்டாள். இதையடுத்து கொந்தளித்த அவள், ” நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? ஒரு பெண்ணின் கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறீர்களே “ என்று கடிந்து கொண்டாள்.

நீ எழிலை திருமணம் செய்யக்கூடாது

சிவசங்கரி கயிலை சந்தித்து, எழிலை இந்த ஜென்மத்தில் உன்னை திருமணம் செய்ய நான் விடமாட்டேன் என்று சவால் விடுகிறாள். இன்னொரு பக்கம், கயலின் தோழி நீ எழிலை திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக ஜோசியரிடம் பொய் சொல்லி கூட, நீ அவனை கல்யாணம் செய்தால் அவன் இறந்து விடுவான் என்று சங்கரி சொல்ல வைத்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டாள். 

கயலுக்கு வந்த சந்தேகம்

தனது தோழி சொன்ன பிறகு கயலுக்கும் சந்தேகம் வருகிறது. அதனால் ஜோதிடரிடம் சென்று, நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டார் கயல்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.