பணத்துக்காக ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டா.. வாழ்நாள் எதிரியே நீ தான்.. பரபரப்பான கட்டத்தில் கயல்..
கயல் தன் பெரியப்பா வீட்டிற்கு குடும்பத்துடன் வந்த நிலையில், சுப்ரமணி கயல் பணத்துக்காக தான் எழிலை கல்யாணம் செய்து கொண்டாள் என கலாட்டா செய்கிறான்.
பைனான்சியர் பிரச்சனையில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிய பெரியப்பாவின் பாசத்தை இனியும் இழக்கத் தயாராக இல்லை என முடிவெடுத்த கயல், எழலிலுடன் அவரது வீட்டிற்கு கல்யாண விருந்துக்கு வர சம்மதிக்கிறார். கயலுடன் அவரது குடும்பத்தினரும் அவரது பெரியப்பா தர்மலிங்கம் வீட்டிற்கு வருகின்றனர்.
கோவத்தில் கத்திய சுப்ரமணி
ஏற்கனவே, கயல் வீட்டிற்கு வருவதை விரும்பாத தர்மலிங்கத்தின் மகன் சுப்ரமணி, அம்மா, அப்பாவை திட்டி வருகிறான்.. நீங்கள் எல்லாம் நல்லவங்களா மாறிட்டா என் வாழ்ககையை கெடுப்பிங்களா என சண்டையிடவும் செய்தான். இதற்கிடையில், இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மையை கயலிடம் சொல்லவும் முடிவு செய்தார். ஆனால், இதற்கு அவரது மனைவி வடிவு மறுப்பு தெரிவிக்கிறார்.
சாப்பிடும் போதே ஆரம்பித்த சண்டை
இந்நிலையில், தர்மலிங்கம் வீட்டிற்கு வந்த கயலும் எழிலும் சுப்ரமணியை தேடுகின்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சுப்ரமணி மிகவும் காட்டமாக கயலிடம் சண்டைக்கு செல்கிறான். அத்தோடு நில்லாமல் கயல் குறித்து மிக மோசமாகவும் கூறுகிறார்.
கயல், பணத்துக்கு ஆசைப்பட்டு தான் எழிலை கல்யாணம் செய்து கொண்டாள் என எழிலிடம் மிகவும் கோபமாக கூறுகிறான். அத்துடன் கயலின் திட்டம் குறித்து எதுவும் தெரியாமல் எழில் கயல் பின்னாலே சுற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினான். சுப்ரமணியின் கோவத்தைப் பார்த்த மூர்த்தியும், தர்மலிங்கமும் அவனை கயலின் அருகில் போகாமல் இருக்க பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
வாழ்நாள் எதிரியே நீ தான்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கயல், என் கூடப் பிறந்தால் தான் சகோதரப் பாசம் இருக்கும் என அவசியம் இல்லை. நீ பாசமாகத் தான் இருந்து பாரேன் என கூறுகிறார். இதைக் கேட்ட உடன் மீண்டும் கோபமடைந்த சுப்ரமணி, என் வாழ்நாள் எதிரியே நீ தான். உன்னை சும்மா விட மாட்டேன் என சத்தமிடுகிறான். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
விருந்துக்கு அழைக்கும் பெரியப்பா தர்மலிங்கம்
சிவசங்கரி தீட்டிய திட்டத்தையும் தவிடுபொடியாக்கிய தர்மலிங்கம், கயலையும் எழிலையும் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார். இதுகுறித்து தர்மலிங்கத்தின் மகன் சுப்ரமணி, இந்த வீட்டில் எல்லாரும் எனக்கு எதிராக மாறிவிட்டீர்கள் என சண்டையிட்டு கிளம்புகிறான்.
குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தர்மலிங்கம்
அத்துடன், கயல் விருந்துக்கு வரும் போது. இத்தனை நாள் நான் மறைத்து வைத்த உண்மையை கயலிடம் சொல்லி, அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க உள்ளேன் என தர்மலிங்கம் அவரது மனைவி வடிவிடம் கூறினார்.
இதைக் கேட்ட வடிவு, நீங்கள் சொல்லியது போல் நடந்தால், கயல் நமக்கு முடிவு கட்டிவிட்டு சென்று விடுவாள் என எச்சரிக்கிறார்.
என்ன நடக்கப் போகிறது?
இந்த நிலையில், கயல் குடும்பத்துடன் எழிலும் தர்மலிங்கம் வீட்டிற்கு விருந்துக்கு வருகின்றனர். இந்த சமயத்தில் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தர்மலிங்கம் கயலிடம் உண்மையை சொல்வாரா? என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.
இது என்ன உண்மை? கயல் அந்த உண்மை தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்பதை இனி வரும் எபிசோடில் காணலாம்.
டாபிக்ஸ்