ஒன்னும் இல்லாதவளுக்கு கடைசி நேரத்தில் கிடைக்கும் பலன்.. சிக்கலில் இருந்து காப்பாற்றியது யார்? கயல் இன்றைய எபிசோட்
வட்டிக்காரர் கொடுத்த பிரச்சனையை கயல் சுமூகமாக தீர்த்து வைத்த நிலையில், அவரை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றியது யார் என்பதை சிவசங்கரியிடம் கூறுகிறார்.

ஒன்னும் இல்லாதவளுக்கு கடைசி நேரத்தில் கிடைக்கும் பலன்.. சிக்கலில் இருந்து காப்பாற்றியது யார்? கயல் இன்றைய எபிசோட்
தன் மகன் எழிலுடன் கயல் சந்தோஷமாக இருப்பதை பொருத்துக் கொள்ள முடியாத சிவசங்கரி, கயல் குடும்பத்திற்கு பிரச்சனை கொடுக்க நினைக்கிறார். அதன் மூலம் கயலின் சந்தோஷத்தை பறிக்க நினைக்கிறார்.
சிவசங்கரியின் திட்டம்
இதற்ககாக கயல் குடும்பத்திற்கு வட்டிக்கு காசு கொடுத்த நபரை வரவழைத்து வட்டிக்கு கொடுத்த பணத்தை உடனடியாக இன்னும் 3 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி சண்டையிடுமாறு கூறுகிறார். இதைக் கேட்டு, வட்டிக்காரரும் கயல் குடும்பத்துடன் தகராறு செய்கிறார்.
தன் மனதிற்குள் வீட்டில் ஏதோ பிரச்சனை நடக்கிறது என்பதை அறிந்து வீட்டிற்கு வந்த கயலிடம், அனைவரும் வீட்டில் நடந்த தகராறை மறைக்கின்றனர். பின், அவர், நடந்தவற்றைக் கூறி எழிலுடன் வீட்டிற்கு வருகிறார். அதையும் குடும்பத்தினர் எப்படியோ சமாளித்து இருவரையும் அனுப்பி வைக்கின்றனர்.