விருந்துக்கு போகும் கயலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பெரியப்பா.. கயல் சீரியலில் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விருந்துக்கு போகும் கயலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பெரியப்பா.. கயல் சீரியலில் இன்று

விருந்துக்கு போகும் கயலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பெரியப்பா.. கயல் சீரியலில் இன்று

Malavica Natarajan HT Tamil
Nov 16, 2024 07:23 AM IST

கயலின் பாசத்திற்கு முன் தன் ஆணவம் எல்லாம் தோற்றுப் போனதாக கூறும் தர்மலிங்கம், தான் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மையை கயலிடம் கூற உள்ளதாக முடிவெடுக்கிறார்.

விருந்துக்கு போகும் கயலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பெரியப்பா.. கயல் சீரியலில் இன்று
விருந்துக்கு போகும் கயலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பெரியப்பா.. கயல் சீரியலில் இன்று

விருந்துக்கு அழைக்கும் பெரியப்பா தர்மலிங்கம்

இந்நிலையில், சிவசங்கரி தீட்டிய திட்டத்தையும் தவிடுபொடியாக்கிய தர்மலிங்கம், கயலையும் எழிலையும் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார். இதுகுறித்து தர்மலிங்கத்தின் மகன் சுப்ரமணி, இந்த வீட்டில் எல்லாரும் எனக்கு எதிராக மாறிவிட்டீர்கள் என சண்டையிட்டு கிளம்புகிறான்.

குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தர்மலிங்கம்

அத்துடன், கயல் விருந்துக்கு வரும் போது. இத்தனை நாள் நான் மறைத்து வைத்த உண்மையை கயலிடம் சொல்லி, அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க உள்ளேன் என தர்மலிங்கம் அவரது மனைவி வடிவிடம் கூறினார்.

இதைக் கேட்ட வடிவு, நீங்கள் சொல்லியது போல் நடந்தால், கயல் நமக்கு முடிவு கட்டிவிட்டு சென்று விடுவாள் என எச்சரிக்கிறார்.

என்ன நடக்கப் போகிறது?

இந்த நிலையில், கயல் குடும்பத்துடன் எழிலும் தர்மலிங்கம் வீட்டிற்கு விருந்துக்கு வருகின்றனர். இந்த சமயத்தில் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தர்மலிங்கம் கயலிடம் உண்மையை சொல்வாரா? அது என்ன உண்மை என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

கயலுக்கு எதிராக சதி செய்யும் சிவசங்கரி

முன்னதாக, கயல் எழிலை காதலித்து திருமணம் செய்து கொண்டதே அவரிடம் உள்ள சொத்துகளை பார்த்து தான் என சிவசங்கரி குற்றம் சாட்டிய நிலையில், அதை நிரூபிக்க கயல் திருமணத்திற்கு வாங்கிய பணத்தை வட்டிக்காரரிடம் உடனடியாக திரும்பத் தர வற்புறுத்துமாறு கூறினார்.

தவிக்கும் கயல்

சிவசங்கரி கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்ட வட்டிக்காரரும், 3 மணி நேரத்தில் தான் வட்டிக்கு கொடுத்த பணம் வர வேண்டும் என அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். இதை சிவசங்கரி மூலம் அறிந்த கயல், விரைந்து வீட்டிற்கு வருகிறாள்.

பணத்தை இன்னும் 1 மணி நேரத்தில் தருவதாக கயல் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில், மூர்த்தியின் மகள் கயலின் பெரியப்பா தர்மலிங்கத்திற்கு போன் செய்து நடந்தவற்றை கூறுகிறார்.

தக்க சமயத்தில் கை கொடுத்த பெரியப்பா

இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த பெரியப்பா தர்மலிங்கம், மனைவி வடிவுடன் கயல் வீட்டிற்கு வருகிறார்.

பின், அங்கிருக்கும் சூழலைப் பார்த்த அவர் வட்டிக்காரரிடம் 3 லட்ச ரூபாய் பணத்தை உடனடியாகத் தருகிறார். இதனால், அவரும் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். மேலும், கயல் குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை என வந்தால் இனி அதை சரிசெய்ய நான் இருக்கிறேன் எனவும் கூறி கயல் குடும்பத்தை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

தான் கேட்ட மன்னிப்பால், தன் பெரியப்பா இந்தளவு மனம் மாறி இருப்பதைக் கண்ட கயல், இனி தன் பெரியப்பாவின் உறவை இழக்கக் கூடாது என முடிவெடுக்கிறாள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.