வட்டிக் காசு கேட்டவரை புரட்டி எடுக்கும் கயல் குடும்பம்.. சூழ்ச்சி செய்யும் சிவசங்கரி.. கயல் இன்றைய எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வட்டிக் காசு கேட்டவரை புரட்டி எடுக்கும் கயல் குடும்பம்.. சூழ்ச்சி செய்யும் சிவசங்கரி.. கயல் இன்றைய எபிசோட்

வட்டிக் காசு கேட்டவரை புரட்டி எடுக்கும் கயல் குடும்பம்.. சூழ்ச்சி செய்யும் சிவசங்கரி.. கயல் இன்றைய எபிசோட்

Malavica Natarajan HT Tamil
Nov 11, 2024 10:13 AM IST

தன்னிடம் சவால் விட்ட கயலை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என நினைத்து, கயலின் குடும்பத்திற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சிவசங்கரி இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வட்டிக் காசு கேட்டவரை புரட்டி எடுக்கும் கயல் குடும்பம்.. சூழ்ச்சி செய்யும் சிவசங்கரி.. கயல் இன்றைய எபிசோட்
வட்டிக் காசு கேட்டவரை புரட்டி எடுக்கும் கயல் குடும்பம்.. சூழ்ச்சி செய்யும் சிவசங்கரி.. கயல் இன்றைய எபிசோட்

கயல்- எழில் காதலால் கடுப்பாகும் சிவசங்கரி

அந்த வீடியோலில், கயலும் எழிலும் ஒருவருக்கு ஒருவர் அன்யோன்யமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்த சிவசங்கரிக்கு கோபம் தாங்கவில்லை. இதனால், என் மகனை என்னிடம் இருந்து பிரித்துலிட்டு, நீ சந்தோஷமாக இருக்கிறாயா? இனி நீ சந்தோஷமாக இருக்கவே முடியாது,நான் உன் குடும்பத்திற்கு கொடுக்கப்போகும் பிரச்சனையில் அந்தக் கயலை என் காலைப் பிடித்து கெஞ்ச வைப்பேன் என தன் மனதிற்குள்ளே திட்டம் தீட்டுகிறார்.

வட்டிக் காரரை வைத்து பிளான்

அப்போது, அவர் கயல் குடும்பம் கல்யாணத்திற்காக வட்டிக்குப் பணம் வாங்கியவரை வரவைத்து பேசுகிறார். அந்த சமயத்தில் கயல் திருமணத்திற்காக கொடுத்த பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என கயல் குடும்பத்தை தொந்தரவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இதனை ஏற்ற அந்த நபரும், கயல் வீட்டில் பணத்தைக் கேட்டு நச்சரித்துள்ளார். இது வாக்குவாாதமாக மாறி பின் கை கலப்பாக மாறியது. கோபத்தில் கயலின் தம்பி அன்பு பணம் கேட்டவரை சரமாரியாக தாக்குகிறார்.

பதற்றமடைந்த கயல்

இந்நிவையில் இந்தத் தகவல் கயலுக்கு தெரியலருகிறது. இதையடுத்து கயல், பதற்றத்துடன் தனது அம்மா வீட்டிற்கு வருகிறார். எனக்கு முன்னாடி சவாலா என தனக்குள்ளே பேசிய சிவசங்கரி, இந்த முறை நீ தோற்றுப் போய் என் காலில் விழுவது நிச்சயம் என பெருமிதம் கொள்கிறாள்.

இதைடுத்து, கயல் வட்டிக்காரரிடம் பணத்தை திரும்பி அளித்தாரா? இதற்கு பின் தன் மாமியாரின் சதித்திட்டம் உள்ளதை அறிவாரா? சிவசங்கரியின் திட்டத்துக்கு முடிவு கட்டுவாரா என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

வந்த முதல் நாளே சண்டை

முன்னதாக நேற்றைய எபிசோடில், தலை தீபாவளி முடிந்து கயலும் எழிலும், எழில் வீட்டிற்கு வருகின்றனர், அப்போது, கயலின் பொருட்களை எல்லாம் சிலர் எழில் வீட்டிற்கு எடுத்து வந்தனர். எழிலின் வீட்டிற்கு வந்ததில் இருந்து கயல் முகம் வாட்டமாகவே இருப்பதைப் பார்த்த எழில், இதை உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ என கயலை சமாதானம் செய்கிறார்.

ஒரு மாசத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும்

இதை சிவசங்கரி மறைந்திருந்து கேட்டதால் ஆத்திரமடைந்து கயலிடம் எண்ணி ஒரே மாசத்தில் அதுக்குள்ள உன்னை வீட்டை விட்டு துரத்துவேன், கண்டிப்பா ஒரு மாசத்துக்குள்ள இதெல்லாம் நடக்கும் என சவால் விடுகிறார். அதற்கு கயலோ, எங்களோட நெருக்கத்தையோ, அளவு கடந்த காதலையோ பார்த்து பொறாமையாக இருக்கா என கேள்வி எழுப்புகிறார்.

இப்படி வந்த முதல் நாளில் இருந்தே மாமியார் Vs மருமகள் போட்டி நடைபெறுவதை காண மக்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.