Kayal Serial: வடிவு போட்ட புது கண்டிஷன்.. எழிலை நினைத்து கதறும் கயல்.. இன்றைய ப்ரோமோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: வடிவு போட்ட புது கண்டிஷன்.. எழிலை நினைத்து கதறும் கயல்.. இன்றைய ப்ரோமோ

Kayal Serial: வடிவு போட்ட புது கண்டிஷன்.. எழிலை நினைத்து கதறும் கயல்.. இன்றைய ப்ரோமோ

Aarthi Balaji HT Tamil
Jul 01, 2024 01:55 PM IST

Kayal Serial: எழில் புகைப்படத்தை வைத்து கொண்டு உன்னை மறக்கவே முடியவில்லை, எப்படி உன்னுடன் வாழாமல் இருக்க போகிறேன் என்று கயல் அழுது கொண்டு இருக்கிறார்.

வடிவு போட்ட புது கண்டிஷன்.. எழிலை நினைத்து கதறும் கயல்.. இன்றைய ப்ரோமோ
வடிவு போட்ட புது கண்டிஷன்.. எழிலை நினைத்து கதறும் கயல்.. இன்றைய ப்ரோமோ

தமிழ் தொலைக்காட்சித் துறையானது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிராந்திய சேனல்களிலும் டிவி சோப்புகளுடன் வளர்ந்து வருகிறது. மதியம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை விட இரவில் ஒளிபரப்பபடும் சீரியல்களே இல்லத்தரசிகளை ஈர்க்கின்றன.

டி. ஆர். பியில் மாஸ்

அதே சமயம் ஃபிரைம் டைம் சீரியல்கள் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் திரையில் கவர்ந்து. அதிக டி. ஆர். பியில் களுக்கு வழிவகுக்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் திரையிடப்பட்டடு வரும் சீரியல் கயல். சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல சீரியல்களில் இதுவும் முக்கியமான ஒன்று.

முதலில் டி. ஆர். பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த கயல் தற்போது இரண்டாவது இடத்திற்கு நகர்ந்து சென்று இருக்கிறது.

கயல்

பிரபல தொலைக்காட்சி நடிகையான சைத்ரா ரெட்டி, கயல் என்ற பாத்திரத்தில் தலைப்பு கேரக்டரில் நடித்து உள்ளார். இது அந்தக் கதாபாத்திரம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி போராடுகிறார் என்பதைச் சுற்றி வருகிறது. அவர் குடும்பத்தின் ஒரே நபராக சம்பாதிப்பவர். ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் கயலின் அமைதியான காதலனாக எழில் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.

கயலின் நிச்சயதார்த்தம்

காதலிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்த கயல் எப்படியோ இறுதியாக எழிலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அடுத்த கட்டமாக கயல் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதில் எப்படியாவது கலகத்தை ஏற்படுத்தி நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று கயலின் பெரியப்பா மற்றும் அவரின் மனைவி வடிவு பல சதி திட்டங்களை செய்தார்கள். ஆனால் கயல் அதையெல்லாம் முறியடித்து அம்மாவின் ஆசைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இன்றைய ப்ரோமோ

இந்நிலையில் கயல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் கயலின் வாழ்க்கையையும் அவரின் குடும்பத்தையும் தன் காலில் விழ வைக்க வேண்டும் என்று வழக்கம் போல் பெரியப்பா தன் மனைவி மற்றும் மகளிடம் பேசி கொண்டு இருக்கிறார். 

இதை எதார்த்தமாக அவர் வீட்டிற்கு சென்ற மூர்த்தி கேட்டுவிடுகிறார். “ நாங்க வாழவே கூடாது என நினைக்கும் அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டோம்” என அழுத படி நியாயம் கேட்கிறார் மூர்த்தி. மறுபக்கம் எழில் புகைப்படத்தை வைத்து கொண்டு உன்னை மறக்கவே முடியவில்லை, எப்படி உன்னுடன் வாழாமல் இருக்க போகிறேன் என்று கயல் அழுது கொண்டு இருக்கிறார்.

வடிவு, “ உன்னுடைய தங்கச்சி கல்யாணத்த நாங்க தடுக்காம முன்னால் நின்று நடத்த வேண்டும் என்றால்” என்று ஒரு கண்டிஷன் போடுவது போல் ப்ரோமோ முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.