Kayal Serial: தீபிகா முகத்திரையை கிழிக்க துடிக்கும் ஆனந்தி.. கயலுக்கு உண்மை தெரியவருமா?
Kayal Serial: தீபிகா, கயலின் தாயிடம், ஆனந்தி உண்மையை சொல்வதற்குள் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என சொல்கிறார்.
Kayal Serial: கயல் சீரியலில் இருந்து இன்று ( அக். 25 ) வெளியான புரோமோவில், தீபிகா, கயலின் தாயிடம், ஆனந்தி உண்மையை சொல்வதற்குள் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என சொல்கிறார்.
கயலிடம் சென்று ஆனந்தி, “ என் அக்காவின் வாழ்க்கையை காப்பாற்றுவது தான் இப்போது எனக்கு முக்கியம், அந்த தீபிகா இருக்கிறாள் அல்லவா.. “ என்று நடந்த அனைத்தையும் சொல்லுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கயல் கடுப்பில் தீபிகாவை பார்த்து முறைத்தப்படி இருக்கிறார். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய கயல் சீரியலின் புரோமோவில் இடம் பெற்றிருக்கின்றன. விரிவாக என்ன நடக்கிறது என்பதை சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.
நேற்றைய எபிசோட்
கயல் சீரியலில் நேற்று ( அக். 24 ) மூர்த்தி முகத்தில் ஒருவித சஞ்சலம் தெரிந்த நிலையில், அதை கயலும், காமாட்சியும் கண்டு பிடித்து விட்டார்கள். இதையடுத்து அவர்கள் இது குறித்து கேட்க, அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். எங்கு அவர் உண்மையை சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் பெரியம்மா பின்னால் சென்று அங்கு இருப்பவர்களை நகர்த்தி அனுப்பி, மூர்த்தியிடம் நடந்த எதையும் சொல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
தீபிகா பிளான்
மறுபக்கம் ஸ்ப்ரே செய்து வைத்து இருக்கும் ஆடையை எப்போது தான் கயல் போடுவார் என்று ஆவலாக காத்திருக்கிறார் தீபிகா. அப்போது என்று பார்த்து அங்கு வந்த எழில், “ நீ இந்த ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லி புது ஆடையை கொடுத்துவிட்டார்”. மேலும் என் ஆடையின் நிறத்திற்கு புதியதாக கொண்டு வந்தது சரியாக இருக்கும் என புகைப்படம் எடுக்க வந்தவர், சொன்னதாக கூறினார். தன் பிளானை மொத்தமாக அழித்தவரை அழைத்து தீபிகா திட்டிக் கொண்டு இருந்தார்.
தீபிகா முகத்திரையை கிழிக்க துடிக்கும் ஆனந்தி
இதற்கிடையே, கயலின் தங்கை தீபிகாவின் திட்டத்தை தெரிந்து கொண்டு, இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன் முகத்திரையை கிழிக்கிறேன் என்று சொல்லி வேகமாக கிளம்புகிறாள்.
உடனே தீபிகா சென்று நடந்த அனைத்தையும், எழிலின் தாய்யிடம் சொல்கிறார். அவர் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆனந்தியை நோக்கி செல்கிறார்.
ஆனந்தியிடம் ஏன் கண் கலங்கி இருக்கிறது என கேட்க, தீபிகாவின் திட்டம் மொத்தமும் சொல்லிவிடுகிறார். இவளை எப்படி சமாளிப்பது என்று பார்த்து, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதை நாம் சென்று கெடுக்க வேண்டாம் என்று கூறி சமாதனம் செய்துவிட்டார். அத்துடன் நேற்றைய ( செப் 24 )
எபிசோட் நிறைவு பொற்றது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்