Kayal Serial: கயலுக்கு எதிராக நடந்த கூட்டு சதி.. முக்காடு போட்டு மறைத்த மூர்த்தி.. பதறும் வடிவு! -கயல் சீரியல் அப்டேட்!
Kayal Serial: அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். இதற்கிடையே, கயலின் தங்கை தீபிகாவின் திட்டத்தை தெரிந்து கொண்டு, இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறாய். - கயல் சீரியல் அப்டேட்!

Kayal Serial: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், மூர்த்தி முகத்தில் ஒருவித சஞ்சலம் தெரிந்த நிலையில், அதை கயலும், காமாட்சியும் கண்டுபிடித்து விட்டார்கள். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து கேட்க, அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். இதற்கிடையே, கயலின் தங்கை தீபிகாவின் திட்டத்தை தெரிந்து கொண்டு, இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன் முகத்திரையை கிழிக்கிறேன் என்று சொல்லி வேகமாக கிளம்புகிறாள். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய கயல் சீரியலின் புரோமோவில் இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
தர்மலிங்கமும்,வடிவும் கயலின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக சிவசங்கரியின் தங்கையை வைத்து, அன்புவின் ஃபோனை திருடி, லேடிஸ் பாத்ரூமில் வைத்தார்கள். அது பெரிய பிரச்சினையாக வெடித்த நிலையில், அதனை வைத்து, கல்யாணத்தை நிறுத்த வேண்டும் அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். மகேஷ் இதை சைபர் கிரைம் போலீசாரிடம் கொண்டு செல்லலாம் என்று கூறி, உடனே போன் செய்து வரவும் வைத்தான்.