அத விட சந்தோசமான விஷயம் என்ன இருக்கு.. குழந்தை மாதிரி.. ஐ போன புடுங்கிட்டு போயிடுச்சு அந்த பொண்ணு.. நெகிழும் ஜெயம் ரவி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அத விட சந்தோசமான விஷயம் என்ன இருக்கு.. குழந்தை மாதிரி.. ஐ போன புடுங்கிட்டு போயிடுச்சு அந்த பொண்ணு.. நெகிழும் ஜெயம் ரவி

அத விட சந்தோசமான விஷயம் என்ன இருக்கு.. குழந்தை மாதிரி.. ஐ போன புடுங்கிட்டு போயிடுச்சு அந்த பொண்ணு.. நெகிழும் ஜெயம் ரவி

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 18, 2024 04:21 PM IST

எங்கேயும் காதல்ல 17 வயது அவங்களுக்கு.. ஒரு குழந்தை மாதிரி.. அதுனால எங்க டீம்ல அவங்கள குழந்தை மாதிரிதான் பார்த்திக்கிட்டு இருப்போம். நல்லா சாட் மாதிரி எதயாவது உட்காந்து சாப்பிட்டுகிட்டு இருப்பாங்க.. சாப்பிட்டது போதும் வாம்மா ஷாட்டுக்குன்னு தான் நாங்க கூப்பிடுவோம்.

அத விட சந்தோசமான விஷயம் என்ன இருக்கு.. குழந்தை மாதிரி.. ஐ போன புடுங்கிட்டு போயிடுச்சு அந்த பொண்ணு..  நெகிழும் ஜெயம் ரவி
அத விட சந்தோசமான விஷயம் என்ன இருக்கு.. குழந்தை மாதிரி.. ஐ போன புடுங்கிட்டு போயிடுச்சு அந்த பொண்ணு.. நெகிழும் ஜெயம் ரவி

உங்களுடைய ஹீரோயின்ஸ் அசின், ஜெனிலியா, தமன்னா, அவங்க கூட எல்லாம் சேர்ந்து அந்த மாதிரி காம்போ மீண்டும் எப்ப வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்து கிட்டு இருக்காங்க என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயம் ரவி, 'அப்படியா.. வந்தா நல்லா இருக்கும் கண்டிப்பா.. ஜெனிலியா கூட திருப்பி நடிப்பதை விட சந்தோஷமான விஷயம் என்ன இருக்கிறது. ஏன்னா நாங்க இன்னிக்கும் டச்ல இருக்கோம். அவங்களும் நானும் அப்படியே தான் இருக்கோம். சின்ன வயசுல எப்படி ரவுடித்தனம் பண்ணி சுத்திட்டு கலகலப்பாக இருந்தோமோ.. அந்த மாதிரி தான் இருக்கோம். ஸ்ரேயா எல்லாருமே இன்னும் டச் லதான் இருக்கோம். பேசிகிட்டும் இருக்கோம். அந்த பிரண்ட்ஷிப் எல்லாம் கிடைக்காது. அது அந்த காம்பினேஷன் எப்படி திருப்பி எடுத்துட்டு வர்றதுன்னு எனக்கு தெரியல. ஆனா அவங்க வில்லிங்கா இருந்தாங்கன்னா கண்டிப்பா எடுத்துட்டு வருவோம். அதுக்குன்னு ஒரு கதை அமையும். அதுக்குன்னு ஒரு ஸ்கிரீன் ப்ளே வந்துச்சுன்னா சூப்பரா இருக்கும். இந்த இன்டர்வியூ கேட்டு யாராவது அந்த மாதிரி கதை எழுதினால் கூட நல்லா தான் இருக்கும்.

ஹன்சிகா குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயம் ரவி, ஹன்சிகா பத்தி நான் நிறைய சொல்லி இருக்கேன். ஒரு படத்துல வந்துட்டு சொல்லுவாங்க.. லெப்ட் சைடுல ரொமான்டிக் ஹீரோ, ரைட் சைடுல ஆக்சன் ஹீரோ, அப்படின்னு.. அந்த சீன்ல கேமரா கட் பண்ண உடனே ஒன்னு சொன்னாங்க.. ஆனா ஸ்ரெயிட்டா பார்த்தா காமெடி ஹீரோ மாதிரி இருக்க அப்படின்னாங்க.. இந்த மாதிரி ஒருத்தர ஒருத்தர் கலாய்த்து பேசிக்கிடுவோம்.

அவங்க முதல் படத்துல நா இன்ட்ரடியூஸ் பண்ணபோது எங்கேயும் காதல்ல 17 வயது அவங்களுக்கு.. ஒரு குழந்தை மாதிரி.. அதுனால எங்க டீம்ல அவங்கள குழந்தை மாதிரிதான் பார்த்திக்கிட்டு இருப்போம். நல்லா சாட் மாதிரி எதயாவது உட்காந்து சாப்பிட்டுகிட்டு இருப்பாங்க.. சாப்பிட்டது போதும் வாம்மா ஷாட்டுக்குன்னு தான் நாங்க கூப்பிடுவோம். நிறைய கோக் குடிப்பாங்க. அவங்க பர்த்டேக்கே கோக் மாதிரி தான் கேக் பண்ணி செலிபிரேட் பண்ணாங்க.

நா புதுசா பிரான்ஸ்ல இருந்து ஒரு ஐபோன் வாங்கி இருந்தேன். பெருமையா வாங்கிட்டு சூட்டிங்க்கு நடுல உட்காந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்படியே ஒரு உருவம் கிராஸ் ஆகி அத தூக்கிட்டு போயிடுச்சு அப்படியே எனக்கு ஹார்ட் ஸ்டாப் ஆகிடுச்சு. அய்யயோ அப்படின்னு பார்த்த இந்த பொண்ணுதா.. ஹன்சிகா.. இந்த மாதிரி வேலைகள் எல்லாம் நிறையா செய்வாங்க.. அடுத்து இரண்டாவது படம் பண்றப்ப அவங்க 20 வயது கடந்திருந்தது. அந்த டைம்ல அவங்க லவ் ரிலேஷன் ஷிப் அப்படின்னு நிறைய ஷேர் பண்ணுவாங்க.. அப்பறம் 3 ஆவது படம் பண்றப்ப அவங்களே ரொம்ப மெச்சூர் ஆ பேச ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க இப்பவும் நா பாம்பே போனா மீட் பண்ணலாமா கேப்பாங்க என்று தெரிவித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.