அமரன் கதை கேட்டவுடன் இது தான் தோணுச்சு! சாய்பல்லவி கூறியது என்ன?
நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடித்து வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் அமரன். இப்படத்தினை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடித்து வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் அமரன். இப்படத்தினை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படமானது தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளத். இந்நிலயில் இப்படத்தின் படக்குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதன் வீடியோக்கள் தற்போது யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகின்றன.
இப்படத்தின் டீசர் மற்றும் ஹே மின்னலே பாடல் வெளியாகி இருந்தது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.இந்த படத்தை தயாரித்துள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. அதில் படத்தின் சார்பாக படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கமல் ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்துவாக மாறிய சாய்பல்லவி
அமரன் திரைப்படத்தில் முகுந்தின் மனைவி இந்துவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய்பல்லவி. இப்படத்தின் இவரது காட்சிகள் குறித்தான வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிக்கும் படியாக இருந்தது. அமரன் அறிமுக விழாவில் பேசிய சாய்பல்லவி இந்த படத்தின் அனுபவ குறித்து பகிர்ந்துள்ளார். அதில், நான் இயல்பாகவே கதைகளை கேட்பதில்லை. கதையை படித்தவுடன் பிடித்து இருந்தால் படத்திற்கு ஒப்புக்கொள்வேன். ஆனால் அமர படத்தின் கதையை படித்த போது இந்த கதாபாத்திரத்தை சரியாக திரையில் கொண்டுவர முடியுமா என சந்தேகம் ஏற்பட்டது' எனக் கூறினார்.
மேலும் இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் சொல்லும் போது கேட்டு பார்த்த போது, எனக்கு எழுந்த சந்தேகங்களை அவரிடமே கேட்டு தீர்த்துக் கொண்டேன் எனவும் தெரிவித்தார். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பின் ரியல் இந்து ரெபெக்கா வர்கீஸ் இடம் பேசி அவரின் மன ஓட்டத்தை எளிமையாக அறிந்து கொண்டேன் என்று கூறினார்.
அதன் பின் பேசிய இந்து, 'முகுந்த் இறந்த ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் கடினமாக இருந்து விட்டேன். தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். முகுந்திற்கும் நடிகர் கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இப்போதும் முகுந்த் இந்த நிகழ்வுகளை எங்கோ இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சி அடைவார் எனவும் தெரிவித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகி விட்ட சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்வில் இந்த அமரன் படம் மிகவும் முக்கியமான ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாய்பல்லவி, சிவகார்த்திகேயன் ஜோடி திரையில் எப்படி வேலை செய்துள்ளது. மாறுபட்ட கோணத்தில் இறங்கியுள்ள சிவா, உண்மைக் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படம் என அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது அமரன். இந்த வருட தீபாவளிக்கு அமரன் வெற்றி பெரும் என உறுதியாகவே சில திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தப்படம் வெற்றி பெறும் நிலையில் சிவா மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுப்பார் என்பது உறுதியான ஒன்றாகும்.
டாபிக்ஸ்