தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Marimuthu M HT Tamil
May 18, 2024 04:41 PM IST

Kavin In Vetrimaaran Film:இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில், ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து கதாநாயகனாக நடிக்க கவின் கமிட் ஆகியுள்ளார்.

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!
Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் வெற்றிமாறன், தனது ஒவ்வொரு படங்கள் மூலமும் தமிழ் சினிமாவை வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகியப் படங்கள் மூலம் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர். ’ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருதுபெற்றவர்.

வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகும் படம்:

அதுதவிர, தனது கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்து வந்தார். அதில் குறிப்பாக உதயம் என்.ஹெச்.4, பொறியாளன், காக்காமுட்டை, விசாரணை, கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே, வடசென்னை, மிக மிக அவசரம், சங்கத்தலைவன், அனல்மேலே பனித்துளி ஆகியப் படங்களை இயக்குநர் வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், டாடா, ஸ்டார் படத்தின் வெற்றிப் படங்களில் நடித்து பெயர்பெற்ற கவினை வைத்து ‘மாஸ்க்’ என்னும் படத்தினை, தனது கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நிர்வாகத் தயாரிப்பாளர் எஸ்.பி.சொக்கலிங்கம், இணை தயாரிப்பாளராக தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். தெலுங்கு பட நாயகி ருஹானி சர்மாவும் இன்னொரு நாயகியாக ‘மாஸ்க்’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மாஸ்க் படக்குழுவினர் யார்?:

இந்தப் படத்தினை ‘தருமி’ என்ற குறும்படத்தினை இயக்கி, பெயர்பெற்ற விகர்ணன் அசோக் இயக்கி, திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆகவுள்ளார்.

மேலும் இந்த படத்தில் சார்லி, பாலசரவணன், வி.ஜே. அர்ச்சனா, ருஹானி ஷர்மா, சந்தோஷ் மற்றும் பல அபிமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவினை ஆர்.டி.ராஜசேகர் செய்கிறார். படத்தொகுப்பினை ராமரும், கலை இயக்கத்தை ஜாக்கியும் செய்யவுள்ளனர். அதேபோல், பூர்த்தி மற்றும் லிபின் ஆகியோர் படத்திற்கான உடைகளை வடிவமைக்கின்றனர்.

கவினுக்கு ஏறு காலம்: 

சினிமாவிற்கு கவின் வருவதற்கு முன்பு, தனியார் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை, தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகிய சீரியலிலும், பிக்பாஸ் சீசன் 3 ஆகிய நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து பெயர் பெற்றவர், கவின். குறிப்பாக, நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர். பின் லிஃப்ட், டாடா, ஸ்டார் ஆகிய அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் மூலம் நம்பிக்கையான நடிகராக கோலிவுட்டில் உருவாகியிருக்கிறார்.

இதுதவிர, கவின் கடந்த சில தினங்களுக்கு முன், நெல்சன் திலீப்குமாரின் புதிய தயாரிப்பு நிறுவனத்தில் ‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குநராக மாறியுள்ள ‘ கிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் கவின், ‘மாஸ்க்’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதற்கான பூஜைகளும் நடந்துமுடிந்துள்ளன.

இதுதொடர்பாக கவின் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, ‘இந்த தருணம் கடைசியில் நடந்துவிட்டது. இரட்டை நன்றிகள் வெற்றி சார். கருணைகொண்டு,’ஸ்டார்’ படத்தில் நடித்தமைக்காக நன்றி. உங்களுடைய புனைகதையில், நான் சுவாசிக்க நினைத்திருக்கிறேன். அதை உருவாக்க முயன்றதற்கு நன்றி’ என்றார்.

இப்படம் திரில்லர் பாணியில் தயாராகும் படம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றும் முழுக்க முழுக்க பின்னணி இசையினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தில் பணிசெய்யும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு, இப்படம் நல்ல தீனி போடும் எனக் கூறப்படுகின்றது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்