தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Star Movie Collection: நான்கு நாட்களில் அசுர வேட்டை.. உலகளவில் ஸ்டார் பட வசூல் என்ன தெரியுமா?

Star Movie Collection: நான்கு நாட்களில் அசுர வேட்டை.. உலகளவில் ஸ்டார் பட வசூல் என்ன தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
May 14, 2024 10:17 AM IST

Star Movie Collection: நடிகர் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நான்கு நாட்களில் அசுர வேட்டை.. உலகளவில் ஸ்டார் பட வசூல் என்ன தெரியுமா?
நான்கு நாட்களில் அசுர வேட்டை.. உலகளவில் ஸ்டார் பட வசூல் என்ன தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தின் இரண்டாம் பாதி, கதையின் நோக்கத்தை விட்டு சற்று விலகியது போல தெரிந்தாலும், காட்சிகளில் இருந்த சுவாரசியம் படத்தை வெற்றியை நோக்கி அழைத்து சென்று இருக்கிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ்

தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்' என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் கணித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஸ்டார் பட குழு

இந்த படத்தில் கவினுடன், லால், பிரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கவினின் நடிப்பையும், யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பால் ஸ்டார் படத்தின் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஸ்டார் 4 நாள் வசூல்

இந்நிலையில் ஸ்டார் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிறது. இன்னும் திரையரங்குகளில் முதல் நாள் காட்சி போல் இருக்கிறது. அதன் படி, ஸ்டார் படம் வெளிவந்து நான்கு நாட்களில் உலகளவில் 16 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து உள்ளது.

படத்தின் இயக்குநர் இளன் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளார். அதில், “ ஸ்டார் முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.

ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன் . அந்த கண்ணீரும் அன்பே. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது . இறுதி காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றி உள்ளது” என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்